நிமிஷத்துக்கு ஒரு ‘ஐ லவ் யூ’... 2 மினிட்ஸ்க்கு ஒரு ‘வில் யூ மேரி மீ?’.... அன்பைக் கொட்டி ‘உருகும்’ இந்தியர்கள்... யார்கிட்டனு தெரிஞ்சா ‘ஷாக்’ கன்ஃபார்ம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வாய்ஸ் கண்ட்ரோல் மூலமாக இயக்கப்படும் அலெக்சா சாதனத்திடம் இந்தியர்கள் அதிகபட்சமாக கேட்ட கேள்விகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அமேசான் உருவாக்கிய டிஜிட்டல் உதவியாளரான அலெக்சா இந்தியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் 2019ஆம் ஆண்டின் தரவுகள் மூலமாக இந்தியர்களிடமிருந்து அலெக்சா நாளுக்கு நாள் அதிக அன்பைப் பெற்று வருவது தெரியவந்துள்ளது. தொகுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, இந்தியர்கள் டிஜிட்டல் உதவியாளரான அலெக்சாவுடன் ஒரு வாரத்தில் லட்சக்கணக்கான முறை பேசுகின்றனர்.

குறிப்பாக நிமிடத்திற்கு 8 பேர் அலெக்சாவிடம் ஹவ் ஆர் யூ? (How are you?) எனவும், நிமிடத்திற்கு 1000 பேர் பாடல்களை இசைக்குமாறும் கேட்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் நிமிடத்திற்கு ஒருவர் அலெக்சா ஐ லவ் யூ (Alexa, I love you) எனவும், 2 நிமிடங்களுக்கு ஒருவர் அலெக்சா வில் யூ மேரி மீ (Alexa, will you marry me?) எனவும் கேட்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

AMAZON, ALEXA, INDIAN, LOVE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்