மாப்பிள்ளை இல்லாமல் கல்யாணமா..? இளம்பெண் எடுத்த வினோத முடிவு.. இந்தியாவுல இப்படி ஒரு திருமணமா.?
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது பலரையும் வியப்படைய செய்திருக்கிறது.
உலகம் முழுவதும் திருமண சடங்குகள் குறித்த பார்வை மாறியிருக்கிறது. அன்பை அளிக்கவும் பெறவும் பாலினம் தேவையில்லை எனக் கருதுபவர்கள் தங்களது விருப்பப்படி வாழ, உலகின் பல்வேறு நாடுகள் அனுமதியளித்து வருகின்றன. இந்த வகையில் குஜராத்தை சேர்ந்த ஷாமா பிந்து என்னும் இளம்பெண் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்திருக்கிறார். இது அந்த வட்டாரம் முழுமையும் பரபரப்புடன் பேசப்பட்டுவருகிறது.
வினோத திருமணம்
குஜராத்தின் வதோதரா பகுதியில் வரும் 11 ஆம் தேதி இந்து மத சடங்குகளுடன் இவரது திருமணம் நடைபெற இருக்கிறது. இதுகுறித்துப் பேசிய 24 வயதான பிந்து,"நான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. ஆனால் நான் மணமகள் ஆக விரும்பினேன். அதனால் நானே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். ஒரு வேளை நம் நாட்டில் சுய-அன்புக்கு நானே உதாரணமாக இருப்பேன் எனத் தோன்றுகிறது. சுய திருமணம் என்பது உங்களுக்காக நீங்களே இருப்பதற்கான உறுதிப்பாடு. இது சுயமாக தம்மைத் தாமே ஏற்றுக்கொள்ளும் செயலும் கூட. மக்கள் விரும்பிய ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார்கள். நான் என்னை நேசிக்கிறேன், அதனால் இந்த திருமணத்தை நான் விரும்புகிறேன்" என்றார்
மரபுப்படி
தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவரும் பிந்து, தன்னுடைய திருமணம் இந்து மத மரபுகளின்படி நடைபெற இருப்பதாக அறிவித்திருக்கிறார். சிலர் சுய திருமணங்களை பொருத்தமற்றதாகக் கருதுவதாக கூறும் பிந்து,"உண்மையில் இதன்மூலம் பெண்களின் தனிப்பட்ட முடிவுகள் முக்கியம் என்பதை உணர்த்த முயல்கிறேன்" என்றார்.
தனது பெற்றோர் குறித்து பேசிய பிந்து," எனது தாய் மற்றும் தந்தை திறந்த மனமுடையவர்கள். ஆகவே என்னுடைய முடிவை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அவர்களது பரிபூரண சம்மதத்துடனே எனது திருமணம் நடைபெற இருக்கிறது" என்றார்.
தேன்நிலவு
வதோதராவில் உள்ள கோத்ரி கோவிலில் வழக்கமான திருமணம் போலவே தனது திருமணமும் நடைபெற இருப்பதாக கூறும் பிந்து திருமணம் முடிந்தவுடன் கோவாவிற்கு ஒருவார காலம் ஹனிமூன் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தனது திருமணம் குறித்து பேசிய பிந்து," இந்தியாவில் இதற்கு முன்னர் யாராவது இதுபோல சுய திருமணம் செய்துகொண்டார்களா? என இணையத்தில் தேடினேன். அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக தெரியவில்லை. ஆகவே இந்தியாவில் முதல் சுய திருமணம் என்னுடையதாகத்தான் இருக்கும்" என்றார் மகிழ்ச்சியாக.
குஜராத்தை சேர்ந்த இளம்பெண் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்திருப்பது இந்தியா முழுவதும் வைரலாக பேசப்பட்டுவருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- முதல்ல IPS.. இப்போ IAS.. UPSC தேர்வில் கனவை வென்றெடுத்த இளம்பெண்.. குவியும் பாராட்டுகள்..!
- பேஸ்புக்கால் மலர்ந்த காதல்.. இந்தியாவுல இருந்த காதலனை கரம்பிடிக்க வங்கதேச இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு.. கடைசில நடந்த டிவிஸ்ட்..!
- "மேடை, தாலி எல்லாம் ரெடி.." மேடையில மாப்பிள்ளை கோலத்த பாத்துட்டு 'நோ' சொன்ன மணப்பெண்.. "கல்யாண நாள்'லயும் இப்படியா??
- 28 மனைவிகள், 126 பேரக் குழந்தைகளுக்கு முன்பாக 37-வது திருமணம் செய்துகொண்ட தாத்தா.. யாரு சாமி இவரு? மீண்டும் வைரலாகும் வீடியோ..!
- "பாக்குற எடத்துல எல்லாம் அவமானப்படுத்துனா.." கோபத்தில் இருந்த முன்னாள் கணவன்.. காஞ்சிபுரத்தை உலுக்கிய சம்பவம்..
- "மேரேஜ் Fix ஆயிடுச்சு.. வந்து கூட்டிட்டு போ" ..ஜேஜே பட ஸ்டைலில், 10 ரூபாய் நோட்டுல காதலனுக்கு இளம் பெண் எழுதிய லெட்டர் .. வைரல் ஃபோட்டோ
- “என்னோட ஆசை இதுதான்”.. மலை மீது வருங்கால கணவரை கொல்ல முயன்ற ‘இளம்பெண்’ சொன்ன பரபரப்பு வாக்குமூலம்..!
- Laptop-ல் வேலை பார்த்துக் கொண்டிருந்த IT இளம்பெண்.. திடீரென கேட்ட அலறல் சத்தம்.. Work from home-ல் நடந்த அதிர்ச்சி..!
- மதுரையில் தோழியை திருமணம் செய்ய கஷ்டப்பட்டு ஆணாக மாறிய பெண்.. இறுதியில் காதலி எடுத்த பரபரப்பு முடிவு!
- மர்மமான முறையில் மனைவி மரணம்.. சில்லி சிக்கன் கடை நடத்தி வரும் கணவன் கைது.. வெளியான அதிர்ச்சி தகவல்..!