இந்தியா, பாகிஸ்தான் கொடிகளுடன் நின்ற தோழிகள்.. மெய்சிலிர்க்க வைக்கும் 'பின்னணி'!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவை சேர்ந்த  பலருக்கும், அண்டை நாடான பாகிஸ்தான் குறித்து பல விதமான கருத்துக்கள் இருக்கலாம்.

Advertising
>
Advertising

ஆனால், அதே வேளையில் அங்குள்ள மக்களிடம் பழக வாய்ப்பு கிடைத்தால், ஒரு வேளை புதிய கருத்துக்கள் தோன்றலாம்.

அப்படி தான் இந்தியாவை சேர்ந்த ஸ்னேகா பிஸ்வாஸ் என்ற பெண்ணுக்கும், ஹார்வர்டு பிசினஸ் பள்ளியில் பாகிஸ்தான் தோழி ஒருவரை பார்க்கும் போது புதிய பார்வை கிடைத்துள்ளது. இது தொடர்பாக தனது லின்க்டு இன் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்த ஸ்னேகா பிஸ்வாஸ், "இந்தியாவின் சிறிய நகரத்தில் வாழ்ந்து வந்த எனக்கு, பாகிஸ்தான் குறித்த அறிவு என்றாலே, கிரிக்கெட், வரலாற்று புத்தகங்கள் மற்றும் ஊடகங்கள் தான்.இவை அனைத்தும் வெறுப்பு மற்றும் பகை பற்றி தான் இருந்தது. பத்தாண்டுகள் கழித்து பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் பகுதியில் உள்ள பெண்ணை ஹார்வர்ட் பிசினஸ் பள்ளியில் எனது முதல் நாளில் நான் சந்தித்தேன். ஐந்து நொடிகளில் ஒருவருக்கு ஒருவர் விரும்பினோம். முதல் செமஸ்டர் முடிவில், எனது நெருங்கிய தோழி ஆகவும் அவர் மாறினார்.

அதன் பின்னர், பல தருணங்கள் மூலம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் நன்கு அறிந்து கொண்டோம். பழமைவாத பாகிஸ்தானின் பின்னணியில் வளர்ந்த அவர், தனது பெற்றோரின் ஆதரவு காரணமாக, தைரியத்துடன் நெறிமுறைகளை உடைத்து, லட்சியம் நோக்கி நடை போடவும் செய்தார். அவரது கதை என்னையும் ஊக்கப்படுத்தியது.

உங்களின் தனிப்பட்ட நாட்டின் பெருமை வலுவாக இருந்தாலும், மக்கள் மீதான அன்பு என்பது எல்லைகளுக்கு அப்பாற்பட்டதது என்பதை நான் உணர்ந்தேன். எல்லை மற்றும் இடைவெளிகள் என்பது மனிதர்கள் கட்டமைத்து வைத்தது. இதனை நாம் புரிந்த கொள்ளும் போது, இவை அனைத்தும் உடைந்து விடுகிறது" என ஸ்னேகா பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.

அதே போல, ஹார்வர்ட்டில், Flag Day கொண்டாடப்பட்ட போது, ஸ்னேகா மற்றும் அவரது பாகிஸ்தான் தோழி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் கொடிகளுடன் இருக்கும் புகைப்படத்தினையும் ஸ்னேகா பகிர்ந்துள்ளார். எல்லைகள் தாண்டி, தனித்துவமாக விளங்கி நிற்கும் இந்தியா - பாகிஸ்தான் தோழிகளின் நட்பு, தற்போது பலரையும் சபாஷ் போட வைத்துள்ளது.

INDIA, PAKISTAN, FRIENDSHIP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்