அர்ஜென்டினா அணி ரசிகர்களுக்காக.. டீக்கடை நடத்தும் 'இந்திய' பெண் சொன்ன அறிவிப்பு!!.. ரசிகர்களை மனம் நெகிழ வைத்த சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇன்று ஒட்டுமொத்த உலகமே கால்பந்து உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டி குறித்து தான் பேசிக் கொண்டிருக்கிறது.
Represent Image © Copyright to their respect Owners.
இதற்கு காரணம், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கால்பந்து உலக கோப்பைத் தொடரை வென்றது தான். பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேற்றம் கண்டிருந்தது.
மேலும், இரு அணிகளும் கத்தாரில் மோதிய இறுதி போட்டி, ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பை எகிற வைக்கும் வகையில் தான் சென்று கொண்டிருந்தது.
முதல் பாதியில், அர்ஜென்டினா அணி இரண்டு கோல்கள் அடிக்க இரண்டாவது பாதியில் பிரான்ஸ் வீரர் எம்பாப்பே அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து அர்ஜென்டினா அணிக்கு அதிர்ச்சி அளித்திருந்தார். இதனால், இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்க யார் வெற்றி பெறுவார்கள் என்று விறுவிறுப்பு கடைசி நிமிடம் வரை நீடித்திருந்தது. 3 - 3 என்ற கணக்கில் கோல்கள் சமனாக, பெனால்டி சூட்அவுட் நடைபெற்றது.
இதில் அர்ஜென்டினா அணி 4 - 2 என்ற கணக்கில் வெற்றி பெற்று உலக கோப்பையையும் தற்போது சொந்தமாக்கி உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த சமயத்தில் அந்த அணியின் நட்சத்திர வீரராக இருந்த மெஸ்ஸி, அதிக கோல்கள் அடித்து அசித்தி இருந்தார். ஆனால் உலக கோப்பை கை கூடாத விஷயம், அவரை அதிக வேதனையில் ஆழ்த்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு நிச்சயம் அர்ஜென்டினா அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், அதே போல இறுதிப்போட்டி வரை முன்னேறி தற்போது பிரான்ஸ் அணி வீழ்த்தி மூன்றாவது முறையாக அர்ஜென்டினா அணி கால்பந்து உலக கோப்பையை கைப்பற்றி உள்ளது.
மேலும் அவர்களின் வெற்றியை பல நாடுகளில் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, இந்தியாவிலும் பல மாநிலங்களில் அர்ஜென்டினா அணிக்கு ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் செய்த விஷயம் இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டிக்கு முன்பாக, மேற்கு வங்கத்தில் தேநீர் கடை ஒன்றை நடத்தி வரும் பெண் ஒருவர், லியோனல் மெஸ்ஸியின் ரசிகர்கள் மற்றும் அர்ஜென்டினாவுக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் இலவச தேநீர் வழங்குவதாக சமீபத்தில் தனது கடையில் எழுதி வைத்துள்ளார்.
அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றுள்ள சூழலில், இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது அதிகம் இணையத்தை கலக்கி வரும் நிலையில், சிறிய தேநீர் கடை நடத்தி வரும் பெண் கூட, அர்ஜென்டினா அணிக்கு ஆதரவாக முன்னெடுத்த விஷயத்தை பலரும் வியப்புடன் பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்