"அத நெனச்சாலே பயமா இருக்கு"...உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர் பிரதமர் மோடிக்கு வைத்த பரபரப்பு கோரிக்கை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ரஷ்யா தொடுத்துள்ள போர் காரணமாக உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பியுள்ள மாணவர் ஒருவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உருக்கமான கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார்.

Advertising
>
Advertising

செங்கல்சூளையில் லாரி டிரைவருடன் பழக்கம்.. கண்டுகொள்ளாத தாய்.. கண்டித்த தந்தை.. ஆத்திரத்தில் தாயுடன் சேர்ந்து மகள் போட்ட பகீர் திட்டம்..!

போர்

ஐரோப்பிய யூனியனுடன் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்து வந்த நிலையில் இதனை எதிர்த்த ரஷ்யா, அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி போர் தொடுப்பதாக அறிவித்தது. இதனையடுத்து உக்ரைனில் இருந்த தங்களது தூதர்களை உலக நாடுகள் திரும்பப் பெற்றுக்கொண்டன. அதேபோல, உக்ரைனில் கல்வி பயின்றுவரும் இந்திய மாணவர்கள் மற்றும் உக்ரைனில் வசித்துவந்த இந்தியர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியரும்படி உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது.

இதனிடையே "ஆப்பரேஷன் கங்கா" எனப்படும் மீட்பு நடவடிக்கையை இந்திய அரசு துவங்கியது, இதன்மூலம் உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக இந்தியர்களை மீட்கும் பணியினை அரசு மேற்கொண்டுவருகிறது. இப்படி, உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுள் ஒருவரான ரிஷப் ராய் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உருக்கமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

கோரிக்கை

இதுபற்றி பேசிய ரிஷப்," மீண்டும் உக்ரைன் செல்வது குறித்து யோசிக்கவே அச்சமாக இருக்கிறது. எங்களது கல்லூரியில் ஆன்லைன் வகுப்புகளை நடத்த இருப்பதாக அறிவித்து உள்ளனர். மருத்துவ படிப்பினை பொறுத்தவரையில் துறை சார் அனுபவம் மிக அவசியம். ஆகவே, இந்திய மருத்துவக் கல்லூரிகளில் படிக்க அரசு எங்களை அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என்னைப்போலவே படிப்பினை தொடர இயலாமல் தவிக்கும் மாணவர்களுக்கு மாற்று ஏற்பாட்டினை அரசு எடுக்க வேண்டும் என பிரதமர் மோடியை கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

நீட்

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் கலந்து கொண்ட ரிஷப் அதில் வெற்றி பெறாததால், உக்ரைனின் உஷ்ஹோராட் தேசிய பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இருக்கிறார். அங்கே ரிஷப் முதலாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்தது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி பேசுகையில்," மருத்துவம் படிக்க இந்தியாவை விட உக்ரைனில் கட்டணம் குறைவு என்பதால் பெரும்பாலான இந்திய மாணவர்கள் உக்ரைனுக்கு செல்கின்றனர்" என்றார் ரிஷப்.

ரிஷப் போலவே, உக்ரைனில் படித்துவந்த பல இந்திய மாணவர்களும் இந்திய கல்லூரிகளில் தங்களை படிக்க அனுமதியளிக்கவேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துவருகின்றனர்.

"நைட் 2 பேரும் ஆட்டோல போனாங்க" .. சென்னையில் நண்பர்களுக்கு நடந்த பதற வைக்கும் சம்பவம்..!

INDIAN STUDENT, UKRAINE, MODI, PM NARENDRA MODI, ரஷ்யா, உக்ரைன், இந்தியா மாணவர், பிரதமர் நரேந்திர மோடி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்