'எங்கள தனியா வச்சா அதனால என்ன?'... 'மருத்துவ முகாமில் சும்மா அதிரவிட்ட'... ‘சீனாவிலிருந்து திரும்பிய இந்திய மாணவர்கள்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சீனாவிலிருந்து இந்தியாவிற்கு அழைத்துவரப்பட்ட இந்திய மாணவர்கள், தனி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அங்கு குத்தாட்டம் போடும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

கொரோனா வைரஸ் தாக்குதலால், சீனா நாட்டில் இருக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அனைவரும் தங்களது சொந்த நாட்டுக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை, சீனா உஹான் பகுதியில் வசிக்கும் சுமார் 300 இந்திய மாணவர்கள், விமானத்தின் மூலம் இந்தியாவிற்கு அழைத்துவரப்பட்டனர்.

அந்த மாணவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதல் மருத்துவ சோதனைக்காக டெல்லி அருகே உள்ள மானேசர் ராணுவ மருத்துவ முகாமில் 50 பேர் கொண்ட குழுக்களாக தனித்தனியாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த மாணவர்கள் அனைவரும் 3 அடுக்கு கொண்ட மாஸ்க் அணிந்து உள்ளதுடன் தினந்தோறும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். 14 நாட்கள் கண்காணிப்பிற்குப் பிறகு எந்த கொரோனா வைரஸ் தாக்குதலும் இல்லை என்றால், அவர்கள் அனைவரும் அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவர். இந்நிலையில், இந்த மருத்துவ முகாமில் தங்கி வைக்கப்பட்டிக்கும் மாணவர்கள், கொரோனா வைரஸ் குறித்த பயம் எல்லாம் எங்களுக்கு இல்லை என்பதுபோல், மகிழ்ச்சியாக சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போடும் காட்சியை ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் தனஞ்செய் குமார் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள், கொரோனா வைரஸ் இத்ப் பார்த்தா செத்துவிடும் என்றும், நம்பிக்கையோடு இருக்கும் இந்தியர்களை யாராலும் ஜெயிக்க முடியாது என்று ட்வீட் செய்துள்ளனர்.

COLLEGESTUDENT, STUDENTS, CORONAVIRUS, CHINA, MEDICAL, CAMP, MILITATRY, MANESAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்