'லாபம் தான் முக்கியம்' மொத்தமாக 5000 ஊழியர்களை... வீட்டுக்கு அனுப்பும் 'பிரபல இந்திய' நிறுவனம்... கலக்கத்தில் ஊழியர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபிரபல ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றான ஓயோ நிறுவனம் மொத்தமாக 5000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஓயோ நிறுவனம் இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் வர்த்தகம் செய்து வருகிறது. சமீபகாலமாக ஓயோ நிறுவனம் நஷ்டப்பாதையில் பயணம் செய்து வருகிறது. சமீபத்தில் சீனாவில் ஓயோ நிறுவனம் மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்தது. ஆனால் கொரோனா காரணமாக வர்த்தகம் பெரியளவில் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் உலகம் முழுவதும் சுமார் 5000 ஊழியர்கள் வரை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் ஓயோ நிறுவனத்திற்காக சுமார் 30000 பேர் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் அவர்களில் 17% பேரை பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த சில வாரங்களில் அந்நிறுவனத்தில் இருந்து 5000 ஊழியர்கள் வெளியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சீனாவில் மட்டும் 3000 ஊழியர்களை வெளியேற்ற ஓயோ முடிவு செய்திருக்கிறதாம். இந்நிறுவனத்தில் முதலீடு செய்த சாஃப்ட் பேங்க் நிறுவனம் தான் முதலீடு செய்திருக்கும் அனைத்து நிறுவனங்களையும் லாபகரமாக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறது. இதனால் தான் ஓயோ நிறுவனம் ஊழியர்களை வெளியேற்றி லாபக்கணக்கு காட்ட முடிவு செய்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மரத்தின் அடியில் கிடந்த செல்ஃபோன், லேப்டாப்’... ‘கோவில் வளாகம் அருகே’... ‘இளைஞர் எடுத்த அதிர்ச்சி முடிவு’... ‘சென்னையில் நடந்த சோக சம்பவம்’!
- 'தம்பி உங்கள வேலைய விட்டு தூக்குறோம்'... 'நொறுங்கி போன இளைஞர்'... சென்னையில் நடந்த கோரம்!
- 'வயசு 58 ஆச்சு'...'நாங்க காத்திருக்கோம்'...'அரசு வேலைக்கு இத்தனை லட்சம் பேரா'?... பரபரப்பு தகவல்!
- நீங்க 'வீட்டுக்கு' போகலாம்... மொத்தமாக '3000 பேரை'... வேலையை விட்டு நீக்கும் 'பிரபல' நிறுவனம்?
- 'வெளிநாட்டு' வேலைக்கு போறவங்க... 'கண்டிப்பா' இதெல்லாம் செய்யணும்... முக்கிய அறிவிப்பு!
- 'மொத்தமாக' 35 ஆயிரம் பேரை... வீட்டுக்கு அனுப்பும் 'முன்னணி' நிறுவனம்... கலக்கத்தில் ஊழியர்கள்!
- 'சண்ட போட்டு சலிச்சு போச்சு'... மனைவியை ரிவெஞ்ச் எடுக்க... கணவன் செய்த காரியம்... போலி சான்றிதழ் விவகாரத்தால்... மதுரையில் பரபரப்பு!
- நடப்பு 'ஆண்டை' விட 30% அதிகம்... 'பிரபல' கம்பெனியால்... ஐடி ஊழியர்களுக்கு 'அடித்த' ஜாக்பாட்!
- ‘இத்தனை வருஷத்துக்குள்ள’... ‘10 லட்சம் வேலை வாய்ப்புகள்’... ‘பிரபல நிறுவனம் அதிரடி உறுதி’!
- 'மொத்தமாக' 2400 பேரை... வீட்டுக்கு அனுப்பும் 'பிரபல' நிறுவனம்?... அதிரடி ஆட்குறைப்பால் கலங்கும் ஊழியர்கள்!