"Daily நீங்க Office'லயே தூங்கலாம்.." சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்.. "சீக்கிரம் அந்த Address'அ குடுங்கப்பா.."
முகப்பு > செய்திகள் > இந்தியா கொரோனா தொற்றிக்கு பிறகான காலகட்டத்தில் அலுவலக சூழ்நிலை என்பது முற்றிலும் மாறுபட்டு, ஒரு புது விதமான உணர்வைத் தான் பலருக்கும் தருகிறது.
(Represent Image)
அதாவது, நீண்ட நாட்கள் வீட்டில் இருந்த படி வேலை செய்து விட்டு, சில ஆண்டுகளுக்கு பிறகு அலுவலகம் சென்ற போது, ஏதோ வித்தியாசமாக உணர்வதாகவே பலரும் கூறுகின்றனர்.
மீண்டும் தங்களின் ஊழியர்களை பழைய நிலைக்கு கொண்டு வர, பல நிறுவனங்கள் அதிரடி நடவடிக்கை பிறப்பித்து, ஊழியர்களை வேலை வாங்கி வருகிறது.
நிறுவனங்களின் அதிரடி நடவடிக்கை
உதாரணத்திற்கு, சமீபத்தில் கூட ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த முதலாளி, வேலை நேரத்தில் உணவருந்த கூடாது என்றும், அப்படி உணவருந்த செல்பவர்களை கண்காணித்து சொல்பவர்களுக்கு சன்மானம் கொடுப்பதாகவும் கூறி எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதிக முறை உணவருந்த சென்று சிக்கிக் கொண்டால், வேலையை விட்டு நீக்க நேரிடும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தது.
இது அல்லவோ அறிவிப்பு..
வீட்டில் இருந்தபடி வேலை செய்து வந்தவர்கள், நிச்சயம் இது போன்ற அறிவிப்பினால், தங்களின் வேலை போய் விடக் கூடாது என ஒவ்வொரு நிமிடமும் தீயாய் உழைக்கத் தொடங்குவார்கள். ஆனால், இப்படி கண்டிப்பான நடவடிக்கை என எதுவும் இல்லாமல், முற்றிலும் மாறுபட்ட, ஊழியர்களுக்கு மிகவும் பிடித்தமான வகையில் ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம்.
அரை மணி நேர தூக்கம்
'Wakefit' என்ற அந்த நிறுவனம், தங்களின் ஊழியர்கள் அனைவருக்கும், "Announcing Your Right to Nap" என குறிப்பிட்டு, மெயில் ஒன்றை அனுப்பி உள்ளது. இந்த மெயிலில், ஊழியர்கள் அனைவரும் மதியம் உணவருந்திய பின்னர், 2 முதல் 2:30 வரை, 30 நிமிடங்கள் வேலை நேரத்தில் தூங்கிக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
உங்கள ஸ்பீடு பண்ணும்..
மேலும், 26 நிமிட தூக்கம் 33 சதவீதம் செயல்திறனை அதிகரிக்கும் என நாசா ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது என்றும், மதிய நேரத்தில் சிறிது நேரம் தூங்குவது, நினைவுத் திறன், கவனம் செலுத்துவது, படைப்பாற்றல் உள்ளிட்டவற்றுள் உதவி புரியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் அறிவிப்பு தொடர்பான பதிவுகள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட பலரும், இந்த கம்பெனியில் வேலை கிடைக்குமா என்றும், தங்களின் ஆஃபிஸிலும் இது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- எனக்கு வேற வழி தெரியல சார்..Office ஐ வீடாக பயன்படுத்தும் ஊழியர்.. வைரல் வீடியோ..!
- சுடுகாடு வரைக்கும் வந்திட்டு போங்க.. இரவு 12 மணிக்கு நண்பர்கள் போட்ட பிளான்.. நம்பி போனவருக்கு நடந்த கொடூரம்
- ஊழியருக்கு ஒரு கோடி மதிப்புள்ள பென்ஸ் கார் பரிசு.. இன்னும் நிறைய பேருக்கு கொடுக்க போறோம்.. கேரள தொழிலதிபரின் அசத்தல் அறிவிப்பு
- ரத்தன் டாடாவுடன் ஆபீஸ் மீட்டிங் போகும் தெருநாய்.. அவரு சொன்ன வார்த்தைய கேட்டு 40 நிமிஷம் அப்படியே இருந்துச்சு.. வெளிவந்துள்ள சுவாரஸ்ய தகவல்
- மனசுக்குள் இருந்த ரகசியம்.. தூக்கத்தில் உளறி கொட்டிய மனைவி.. கேட்ட உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு தெறித்து ஓடிய கணவன்
- 4 வாரத்திற்கு யாரும் ஆபீஸ் வர வேண்டாம்.. உலகளவில் அனைத்து அலுவலகங்களையும் மூடுவதாக அறிவித்த 'பிரபல ஐடி' நிறுவனம்
- BREAKING: சென்னையில் கல்லூரி ஊழியரை கத்தியால் குத்தி கொன்ற கல்லூரி மாணவி.. பாலியல் தொந்தரவால் ஆத்திரம்
- இனி 'அம்பயர்கள்' நிம்மதியா தூங்குவாங்க...! அவரு 'செஞ்ச காரியம்' கோப்பைய ஜெயிக்குறத விட பெருசு...! - கோலியை நினைத்து உருகிய வீரர்...!
- சொல்றதுக்கு 'நாக்கு' நடுங்குது...! நான் தான் 'இதெல்லாம்' சொன்னேன்னு தெரிஞ்சா என் 'உயிருக்கு' ஆபத்து...! - குண்டுவெடிப்பை நேரில் பார்த்த நபர் கதறல்...!-
- வீட்ல இருந்து 'வொர்க்' பண்ணினது போதும்...! 'எல்லாரும் இனிமேல் ஆஃபீஸ் வந்துருங்க...' - அதிரடியாக அறிவித்த 'பிரபல ஐடி' நிறுவனம்...!