'மலிவு விலை' கொரோனா 'பரிசோதனை'... 'ஒரு மணி' நேரத்தில் 'துல்லியமான முடிவு...' பரிசோதனைக்கு வைத்த 'பெயர் தான் ஹைலைட்டே...!'
முகப்பு > செய்திகள் > இந்தியாகுறைந்த விலையிலான, 'கொரோனா' பரிசோதனை முறையை, சி.எஸ்.ஐ.ஆர்., அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு, பிரபல, துப்பறியும் கதாபாத்திரமான ஃபெலுடாவின் (Feluda) பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும், அதற்கான மருத்துவ பரிசோதனைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன. ஒருவருக்கு முழுமையாக பரிசோதனை செய்ய 4 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான பரிசோதனை கிட் தேவைப்படுகிறது.
இந்நிலையில், குறைந்த விலையிலான கொரோனா பரிசோதனையை, சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும் அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி கவுன்சில் கண்டுபிடித்து உள்ளது.
மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம், கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் பெர்க்லி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இது போன்ற ஒரு பரிசோதனைகளுக்கு, 'டிடெக்டர் ஷெர்லாக்' என, பெயரிட்டு உள்ளனர்.
அதேபோல், நமது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த பரிசோதனை முறைக்கு, பிரபல, துப்பறியும் கதாபாத்திரமான ஃபெலுடாவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது, சத்யஜித் ரே கதைகளில் வரும் துப்பறியும் நிபுணர் கதாபாத்திரத்தின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் கிருமியை கண்டறியும் இந்த முறையில், விலைஉயர்ந்த இயந்திரங்கள் தேவைப்படாது. இந்த பரிசோதனையை, ஒரு மணிநேரத்திற்கும் குறைவான நேரத்தில் முடித்துவிடலாம் என மையத்தின் இயக்குனர் அனுராஜ் அகர்வால் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அழகை விட உயிரே முக்கியம்...' 'வேறு' வழியில்லாமல் 'ஜப்பான் அரசு...' செய்த 'திகைக்கச் செய்யும்' காரியம்...
- கடந்த 'ஜனவரியிலேயே' வாங்கி 'பதுக்கி விட்டது சீனா...' தேவையைவிட '18 மடங்கு' வாங்கிக் 'குவித்தது'... 'இப்போது சீனா வைப்பது தான் விலை...'
- ''இந்த மருந்தால் எந்த பயனும் இல்லை...'' ''உயிரிழப்புகளின் எண்ணிக்கை தான் அதிகரித்துள்ளது...'' 'போற்றிய நாடே தூற்றிய அவலம்...'
- தமிழகத்தில் இந்த ‘ஒரு’ மாவட்டத்துல மட்டும்தான் இதுவரை யாருக்கும் ‘கொரோனா’ பாதிப்பு இல்லை..!
- என்ன கொடுமை! மத்த நாடுகள்ல இருந்து 'கொரோனா' பரவுதாம்... 'அதிரடி'யில் இறங்கிய சீனா!
- உங்க 'சகவாசமே' வேணாம்... 'அந்த' நாட்டிலிருந்து 'மொத்தமாக' வெளியேறும் 1000 நிறுவனங்கள்?... 'இந்தியாவுக்கு' அடிக்கப்போகும் ராஜயோகம்!
- அவர்களை கடலிலேயே 'சுட்டு' வீழ்த்த உத்தரவிட்டுள்ளேன்... கொரோனாவுக்கு நடுவிலும் 'கொந்தளிக்கும்' டிரம்ப்... என்ன காரணம்?
- ஊரடங்கால் 'இந்தியாவில்' இப்படியொரு மாற்றமா?... 'நம்பமுடியாத' உண்மை... 'நாசா' வெளியிட்டுள்ள புகைப்படங்கள்!
- 'கடையைத் திறக்க முடியுமா? முடியாதா?'.. 'பான் மசாலாவுக்கு அடிமையானவரால்' பெட்டிக்கடை ஓனருக்கு நேர்ந்த 'பெரும் சோகம்!'
- இனிமேல் 'இந்த' கடைகளும் இயங்கலாம்... மத்திய அரசு அனுமதி... முழுவிவரம் உள்ளே!