ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி ரொம்ப தூரம் போறவங்களுக்கு அந்த சிக்கல் இருக்காது.. வெளியான அசத்தல் அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ரயில் பயணிகளுக்கு கொரோனாவால் நிறுத்தப்பட்ட வசதி மீண்டும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

ஏசி பெட்டியில் பயணிக்கும் ரயில் பயணிகளுக்கு படுக்கை விரிப்பு, போர்வை வழங்கப்பட்டு வந்தது. இந்த வசதி, கொரோனா தொற்று காரணமாக 2020-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால், கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ரயில்வே வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘ஏசி பெட்டிக்குள் படுக்கை விரிப்பு, போர்வை, திரைச்சீலைகள் வழங்கும் பணியை உடனடியாக துவக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை மீண்டும் இணைக்க ரயில்வே முடிவு எடுத்தது. ரயில்வேயின் இந்த நடவடிக்கையால் கோடிக்கணக்கான பயணிகள் முன்பு போல் மலிவான டிக்கெட்டில் பயணம் செய்ய முடியும். இப்போது ஏசி பெட்டிகளில் படுக்கை விரிப்பு, போர்வைகள், திரைச்சீலைகள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

போர்வைகள், கம்பளிகள், படுக்கை விரிப்புகள் ஆகியவை கிடைக்காததால், நீண்ட தூர பயணம் செல்லும்போது பயணிகள் இவற்றையும் சுமந்துகொண்டு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பால் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்