இனி விமானம் மாதிரி ரயிலையும் லக்கேஜுக்கு கட்டணம்.. எத்தனை கிலோ வரை இலவசமா எடுத்துட்டு போகலாம்..? முழு விவரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ரயில் பயணங்களில் கூடுதல் லக்கேஜ் கொண்டு செல்லும் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | விமானத்தில் அண்ணன், தம்பிக்குள் அடிதடி.. காரணத்தை கேட்டு ஷாக்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!

இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் ரயில் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் பயணங்களில் பயணிகளுக்கு கிடைக்கும் வசதிகள் ஏராளம். அதனால் அனைத்து தரப்பு மக்களும் நீண்ட தூர மற்றும் குறுகிய கால பயணங்களுக்கு ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், விமான பயணங்களில் கூடுதலாக லக்கேஜ் கொண்டு செல்லும் பயணிகளிடத்தில் கட்டணம் வசூலிக்கப்படுவது போல், கட்டண நடைமுறையை ரயில் பயணங்களிலும் இந்தியன் ரயில்வே கொண்டு வந்துள்ளது.

ரயில் பயணிகள் இலவசமாக எவ்வளவு எடை கொண்ட லக்கேஜை தங்களுடன் கொண்டு செல்லலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முன்பு இந்த கட்டண நடைமுறை தேஜஸ் போன்ற தனியார் ரயில்களில் இருந்தது. தற்போது அனைத்து ரயில்களுக்கும் இது கொண்டு வரப்பட உள்ளது.

அதில், ஏசி முதல் வகுப்பு - 70 கிலோ கிராம், ஏசி 2-டயர் ஸ்லீப்பர் / முதல் வகுப்பு - 50 கிலோ கிராம், ஏசி 3 - டயர் ஸ்லீப்பர் / ஏசி சேர் கார் - 40 கிலோ கிராம், ஸ்லீப்பர் கிளாஸ் - 40 கிலோ கிராம், இரண்டாம் வகுப்பு - 35 கிலோ கிராம் வரை இலவசமாக எடுத்துச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர லக்கேஜுக்கான கட்டணம் செலுத்தி ஒவ்வொரு பயணியும் அதிகபட்சமாக ஏசி முதல் வகுப்பு - 150 கிலோ கிராம், ஏசி 2-டயர் ஸ்லீப்பர் / முதல் வகுப்பு - 100 கிலோ கிராம், ஸ்லீப்பர் கிளாஸ் - 80 கிலோ கிராம், இரண்டாம் வகுப்பு - 70 கிலோ கிராம் வரை கொண்டு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவசமாக கொண்டு செல்லும் லக்கேஜுக்கான எடையும் இந்த அதிகபட்ச எடையில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கூடுதல் லக்கேஜுக்கான புக்கிங்கை ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்கள் முன்பு வரை லக்கேஜ் புக்கிங் அலுவலகத்தில் பயணிகள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரயில் டிக்கெட் முன்பதிவின் போதும் பயணிகள் லக்கேஜுக்கு கட்டணம் செலுத்தலாம் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

Also Read | சென்னையில் இருந்து ஊருக்கு போன கொஞ்ச நாள்ல அப்பா மரணம்.. கைதான மகன் சொன்ன ‘திடுக்கிடும்’ தகவல்..!

INDIAN RAILWAYS, LUGGAGE, TRAINS, விமானம், லக்கேஜ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்