"College-க்கு போயே ஆகணுமே.." ரெயில் நிலையத்தில் கலங்கி நின்ற மாணவன்.. உடனடியாக ரெயில்வே அதிகாரிகள் செய்த காரியம்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தான் செல்ல இருந்த ரயில் திடீரென ரத்தானதால், கல்லூரி மாணவர் பரிதவித்து நின்ற நிலையில், அதன் பின்னர் ரெயில்வே ஊழியர்கள் செய்த காரியம், பலரையும் நெகிழச் செய்துள்ளது.

Advertising
>
Advertising

குஜராத் மாநிலத்தை சேர்ந்த சத்யம் காத்வி என்ற மாணவர், சென்னை ஐஐடி-யில் Aerospace Engineering படித்து வந்துள்ளார்.

இவர் தனது சொந்த ஊரிலிருந்து சென்னை வருவதற்காக, வதோதரா ரெயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு ரெயிலில் டிக்கெட் புக் செய்துள்ளார்.

மேலும், வதோதரா ரெயில் நிலையம் வர, ஏக்தா நகரில் இருந்து ரெயில் ஏறவும் சத்யம் காத்வி முடிவு செய்துள்ளார். ஆனால் குஜராத் பகுதியில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏக்தா நகரில் இருந்து வதோதராவிற்கு சத்யம் செல்ல இருந்த ரெயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால், ஏக்தா ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சத்யம், வதோதர ரெயில் நிலையத்திற்கு எப்படி செல்வது என தெரியாமல் திக்கித் திணறி நின்றுள்ளார். அப்போது தான், அங்கிருந்த ரெயில்வே ஊழியர்கள் அசத்தலான காரியம் ஒன்றை செய்ய முடிவு செய்துள்ளனர்.


என்ன ஆனாலும், அந்த மாணவன் கல்லூரி சென்று சேர வேண்டும் என்பதற்காக, அங்கிருந்து டாக்ஸி ஒன்றை புக் செய்து, வதோதரா ரெயில் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்படி, அங்கிருந்து டாக்ஸி மூலம் இளைஞர் சத்யம் காத்வி, வதோதரா ரயில் நிலையம் சென்று, பின்னர் அங்கிருந்து சென்னை ரெயில் நிலையமும் சென்றடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக, வீடியோ ஒன்றையும் சத்யம் காத்வி வெளியிட்டுள்ளார். இதில் பேசும் சத்யம், "என்னுடைய பயணம் சிறப்பாக அமைந்ததற்கு, ஏக்தா நகர் மற்றும் வதோதரா ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரெயில்வேயின் ஒவ்வொரு பயணிகளுக்கும், அவர்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை நான் பார்த்தேன்.

டாக்ஸியில், ஏக்தா நகரில் இருந்து வதோதரா ரெயில் நிலையம் சென்ற பிறகு, அங்கும் ரயில்வே அதிகாரிகள் தயாராக இருந்தனர். எனது லக்கேஜ் வரை பத்திரமாக எடுத்து வந்து, என்னை ரெயிலில் ஏற்றி, வழியனுப்பி விட்டார்கள்" என அந்த மாணவர் நெகிழ்ந்து போய் கூறியுள்ளார்.

இது தொடர்பான வீடியோக்கள், இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வரும் நிலையில், இந்திய ரெயில்வே ஊழியர்களை பலரும் பாராட்டி வருகின்றனர். கல்லூரியில் படிக்கும் மாணவனின் படிப்பு எந்த காரணம் கொண்டும் தடைப்பட்டு விடக் கூடாது என்பதற்காக, டாக்ஸி ஒன்றை புக் செய்து அனுப்பிய ரயில்வே ஊழியர்களுக்கு பலரும் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

INDIAN RAILWAYS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்