‘மொத்தம் 1.84 லட்சம் பேர்’.. ‘ரூ. 4 கோடி அபராதம்’.. இனி ரயில்வே ஸ்டேஷன்ல இத பண்ணாதீங்க..!
முகப்பு > செய்திகள் > இந்தியாரயில்வே நிலையங்களில் குப்பைகளை வீசிய சுமார் 1.84 லட்சம் பயணிகளிடம் 4 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகர்புறம் மற்றும் கிராமங்களில் பொது இடத்தில் குப்பை கொட்டுவதால் ஏற்படும் சுகாதரக்கேடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில் ரயில் நிலையங்களிலும் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது. இதில் ரயில் நிலைய வளாகத்தில் பயணி ஒருவர் குப்பையை வீசினால் அவருக்கு பாதுகாப்புப்படையினர் அதிகபட்சமாக ரூ.500 அபராதம் விதிக்கின்றனர்.
இந்த நிலையில் தெற்கு ரயில்வேயில் உள்ள 6 கோட்டங்களிலும் ரயில்கள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் குப்பை வீசியவர்களிடம் கடந்த 3 ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட அபாரத தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ரயில்கள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் குப்பை வீசிய 47,441 பயணிகளிடம் இருந்து ரூ. 95,39,820 வசூலிக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு 74,779 பயணிகளிடமிருந்து ரூ.1,65,32,410 வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு 57,878 பயணிகளிடம் இருந்து ரூ. 1,30,71,450 வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நடப்பு ஆண்டு (2020) ஜனவரி மாதம் வரை கடந்த 3 ஆண்டுகளில் 1,84,773 பயணிகளிடம் இருந்து மொத்தமாக ரூ. 4,01,74,880 வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'டிக்கெட் கேன்சல் மூலம் அடித்த ஜாக்பாட்'... 'ரயில்வேக்கு கொட்டிய பணம் '... வெளியான பரபரப்பு தகவல்!
- ‘160 பயணிகளுடன் சென்ற ரயில் தடம்புரண்டு விபத்து!’.. ‘கடைசியில் நடந்த நெஞ்சை உருக்கும் சோகம்!’
- சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய ‘பிளாட்பார்ம்’ டிக்கெட் விலை உயர்வு..! எவ்ளோனு ‘செக்’ பண்ணிக்கோங்க..!
- ‘ரயில்நிலையங்களில்’... ‘இலவச வைஃபை’... ‘கூகுள் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு’...
- ‘ரயில்’ நிலைய மேம்பாலம் ‘உடைந்து’ விழுந்து நேர்ந்த பயங்கரம்... விபத்தில் சிக்கி பலர் ‘படுகாயம்’...
- ‘வாயில்’ கேஸ் சிலிண்டர் ‘டியூப்’... முகத்தில் ‘பிளாஸ்டிக்’ பை... ‘நீண்ட’ நாள் பிரச்சனையால்...‘சென்னை’ இளைஞர் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்...
- "வட்டிக்கடையில வேலை பார்த்தவங்க போல..." கோடிக்கணக்கில் அபராதம் வசூலித்த 'டிக்கெட் கலெக்டர்ஸ்'... "எப்பா, 'கின்னஸ் டீம்'... இதெல்லாம் நோட் பண்ணுங்கப்பா..."
- “வந்தாச்சு வாடகை ஸ்கூட்டர்!”.. “ஆப் டவுன்லோடு பண்ணுங்க.. 5 ரூபாய்க்கு புக் பண்ணுங்க!”.. சென்னை மெட்ரோ அதிரடி!
- ‘ரயிலைப் பிடிக்க’.. ‘அவசரத்தில் பயணி செய்த காரியம்’... ‘சென்னை எழும்பூரில் பதறிய மக்கள்’... 'துரிதமாக செயல்பட்ட போலீஸ்'!
- 'பாலில் 'டாய்லெட்'க்கு பயன்படுத்தப்படும் தண்ணீரா?... 'எழும்பூரில் நடந்தது என்ன'?... அதிர்ச்சி வீடியோ!