9 மாதத்தில் இத்தனை ரயில்கள் ரத்தா? ஆர்டிஐ தகவல்... ரயில்வே அமைச்சகம் சொன்ன பதில்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபராமரிப்புப் பணிகள் காரணமாக, நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் 35 ஆயிரம் ரயில்களை ரத்து செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதிய ரயில் பாதைகளை அமைப்பது, தண்டவாளங்களை சரிபார்ப்பது, சிக்னல்கள் பராமரிப்பு பணிகளின் காரணமாகவும், ரயில் பாதைகளை மின்மயமாக்குதல், கனமழை, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் போன்றவை காரணமாகவும் குறிப்பிட்ட வழித்தடங்களுக்கு இடையே ரயில் போக்குவரத்து முழுமையாகவோ, அவ்வபோதோ ரத்து செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் பல்வேறு ரயில்வே கோட்டங்களில் மொத்தம் எவ்வளவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். பல்வேறு பராமரிப்பு பணிககள் காரணமாக, நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் நாடு முழுவதும் மொத்தம் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று ரயில்வே அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
மத்திய ரயில்வே, தென்மேற்கு ரயில்வே, கிழக்கு ரயில்வே, தெற்கு ரயில்வே, மெட்ரோ ரயில்வே என நிர்வாக வசதிக்காக இந்திய ரயில்வே மொத்தம் 19 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில். தற்போதைய மத்திய பாஜக அரசு கடந்த சில ஆண்டுகளாக தனி பட்ஜெட் நடைமுறையை கைவிட்டு, பொது பட்ஜெட்டுடன், ரயில்வே துறைக்கான அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது
ரயில்கள் ரத்து
ரயில் பாதைகள் பராமரிப்பு பணிகள் சரிவர நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பணிகள் மூடுக்கிவிடப்பட்டுள்ளன. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வந்த காலத்தை பயன்படுத்தி, தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள் துரிதமாக நடைபெற்றதையும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோன்று நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் -ஜூன்) 20940, இரண்டாம் காலாண்டில் (ஜூலை -செப்டம்பர்) 7110, மூன்றாம் காலாண்டில் (அக்டோபர் -டிசம்பர்) 6850 ரயில்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே அமைச்சகம் பதில்
இருப்பினும் அதே காலகட்டத்தில் 41ஆயிரத்து 483 ரயில்கள் திட்டமிடப்பட்ட நேரத்தை தாண்டி தாமதமாக இயக்கப்பட்டுள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி மதிப்புள்ள 120க்கும் அதிகமான திட்டங்களை நிறைவேற்ற உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ரயில் பயணங்களில்... லைட் போட்டால் அபராதம்... பாட்டு கேட்டால் நடவடிக்கை!
- எங்க நாட்டுல ‘ஒமைக்ரான்’ பரவுனதுக்கு காரணமே.. வெளிநாட்டுல இருந்து வந்த அந்த ‘பொருள்’ தான்.. புது குண்டை தூக்கிப்போட்ட சீனா..!
- உலகின் முதல் 10 கோடீஸ்வரர்களின் சொத்து இரண்டு மடங்கு! 99% மக்கள் வருமானம் குறைந்தது.. காரணம் என்ன? அதிர்ச்சி ரிப்போர்ட்
- ‘இது அரசியலுக்கு அப்பாற்பட்ட விஷயம்’.. அரசு இதை செய்ய மாட்டாங்கன்னு நம்புறேன்.. Zoho CEO ஸ்ரீதர் வேம்பு முக்கிய கோரிக்கை..!
- ஆச்சரியமா இருக்கே... தடுப்பூசி போட்டவருக்கு குணமடைந்த பக்கவாதம்... உண்மை என்ன?
- இந்திய வம்சாவளி எம்.பி இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் ஆக வாய்ப்பு..!
- தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சிறப்பு ஏற்பாடுகள் என்ன?
- உங்களுக்கு கொரோனா இருக்கா? 15 நாள்கள் இந்த 'பாக்ஸ்'க்கு உள்ளேயே இருக்கணும்.. சீனா கொண்டு வந்துள்ள அதிரடி சட்டம்!
- உயிரிழந்த குரங்கிற்காக ஒன்றுகூடிய கிராம மக்கள் - கண்ணீருடன் இறுதி மரியாதை செய்யும் நெகிழ்ச்சி வீடியோ..!
- 5 வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் - கடைசி நேரத்தில் போட்டியை ஒத்திவைத்த வெஸ்ட் இண்டீஸ்..!