'நாடாளுமன்றத்தில்' ஒருவருக்கு 'கொரோனா'!.. குடும்பத்தினர் உட்பட 'தனிமைப்படுத்தப் பட்ட 11 பேர்!'
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடாளுமன்றத்தில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் பல நாட்களாக வேலைக்கு வரவில்லை என்றும் அவருக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசப் பிரச்சனைகள் இருந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து அவர் டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து அந்த நபரின் குடும்பத்தினர் உள்ளிட்ட 11 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதோடு, அவற்றின் முடிவுகளுக்காகவும் காத்திருந்தனர். இதனிடையே விசாரித்ததில் அந்த நபர் நாடாளுமன்றத்தின் முக்கிய அவை நேரங்களில் பணிபுரியவில்லை என்றும், மக்களவை செயலகத்தில் மட்டுமே பணிபுரிந்து வந்த அவர், நாடாளுமன்ற அவை ஒத்திவைக்கைப்பட்ட மார்ச் 23-ஆம் தேதி முதலே, அந்த நபர் வேலைக்கு வராமல் வீட்டிலேயே இருந்ததாகவும் தெரியவந்துள்ளன.
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
‘நிச்சயமா இது அங்கிருந்து பரவல’... ‘ஆனாலும், எப்படி வந்துச்சுனு’... 'உலக சுகாதார நிறுவனம் விளக்கம்’!
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா' பாதிப்பிலிருந்து ஒருவர் குணமாக 'எத்தனை' நாட்களாகும்?... 'ஆய்வு' முடிவுகள் சொல்வது 'என்ன?'...
- 'மருத்தவமனையில்' அனுமதிக்கப்பட்ட 'மகளைப் பார்க்க...' 'தந்தை செய்த துணிகர காரியம்...' '2 நாட்கள்' கழித்து பிணமாக மீட்கப்பட்ட 'சோகம்...'
- கொரோனாவை வைத்து 'பெருத்த' லாபம்... நெக்ஸ்ட் சீனாவின் 'ராஜதந்திரம்' இதுதானாம்... உலக நாடுகளுடன் கைகோர்த்த 'இந்தியா'... இனி என்ன நடக்கும்?
- 'ரமலான் நோன்பு நேரத்தில்'... 'இதெல்லாத்தையும் கடைப்பிடிங்க’... ‘உலக சுகாதார நிறுவனம் விதித்துள்ள கட்டுப்பாடுகள்'!
- 'இதுவரை இல்லாத மாற்றம்!'.. கிடுகிடுவென உயர்ந்த எண்ணிக்கை!.. இந்தியாவில் நிகழ்ந்த அற்புதம்!
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. முக்கிய தரவுகள்!.. ஓரிரு வரிகளில்!
- எல்லாமே 'மர்மம்' தான்... கொரோனா போல 1500 கொடிய 'வைரஸ்' அங்க இருக்கு... சீனாவுக்கு எதிராக 'சிஐஏ'-வை ஏவிய அமெரிக்கா!
- 'மிரட்டும்' கொரோனாவால் 'இடிந்து' நிற்கும் நாடு... '2 மாதங்களுக்கு' பிறகு... 'முதல்முதலாக' வெளிவந்துள்ள 'நம்பிக்கை' செய்தி...
- அந்த ‘ரெண்டு’ வைரஸ் உங்க நாட்டுல இருந்துதான் வந்தது.. அதுக்கு யாரவது ‘இழப்பீடு’ கேட்டோமா?.. புது ‘குண்டை’ தூக்கிப்போட்ட சீனா..!
- “2 நாளைக்கு ரேபிட் டெஸ்ட் கிட் கொண்டு கொரோனா பரிசோதனை பண்ண வேண்டாம்!” - ICMR-ன் அதிரடி அறிவுறுத்தல்!