'கொரோனாவைத் தடுக்க'... 'வெளிநாட்டிற்கு சென்ற'... 'இந்திய மருத்துவக் குழு'... காரணம் இதுதான்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள குவைத்திற்கு நட்புக்காக உதவும் வகையில் மருத்துவக் குழு ஒன்றை இந்தியா அனுப்பி உள்ளது.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளில் குவைத்தும் ஒன்று. இந்நிலையில், மருத்துவ தேவை குறித்து பிரதமர் மோடி மற்றும் குவைத் பிரதமர் ஷேக்சபா அல் கலீத் அல் ஹமாத் அல் சபா ஆகியோர் தொலைப்பேசியில் பேசினர். தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரும் பேசினர்.

இதனையடுத்து 15 பேர் அடங்கிய மருத்துவ குழு புறப்பட்டு சென்றுள்ளது. போதுமான மருத்துவ உபகரணங்களுடன் அங்கு இரண்டு வார காலத்திற்கு அவர்கள் தங்கி இருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்ற பணிகளில் இந்தியக் குழுவினர் ஈடுபட உள்ளனர். குவைத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இதற்கிடையில், பஹ்ரைன் மற்றும் ஓமன் நாடுகளும் இந்தியாவிடம் உதவி செய்ய கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்