தேதிய அறிவிச்சாச்சு...! இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட தொடங்கும் நாள்...' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸிற்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த 2 ஆம் தேதி அனுமதி வழங்கியது. இந்நிலையில் தடுப்பூசிகளை வினியோகப்பணிகளில் 2 நாட்கள் கால தாமதம் ஏற்பாட்டுள்ளதால், முதலில் திட்டமிட்டபடி 13-ம் தேதி கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

அதன் காரணமாக முன்பு திட்டமிட்ட நாளை விட 2 நாட்கள் கழித்து அதாவது ஜனவரி 16-ம் தேதி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசியானது முதற் கட்டமாக சுகாதார ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்படும் எனவும், எண்ணிக்கையில் சுமார் 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

இரண்டாம் கட்டாமாக 50 வயதிற்கு மேற்பட்டோருக்கும், 50 வயதிற்கு கீழ் உள்ள நீரிழிவு நோய் போன்று பெரும் பாதிப்பை தரும் உடல்நல குறைபாடு உள்ளோருக்கும் தடுப்பூசி போடப்படும் என்றும், இதில் 27 கோடி பேருக்கு  தடுப்பூசி போடப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்