'இந்தியா'வில்... 'டிக்டாக்' 'ஆப்'பை தொடர்ந்து 'பப்ஜி'க்கும் 'ஆப்பு'??... அடுத்ததா 275 'சீன' செயலிகள் லிஸ்ட் ரெடி பண்ணிட்டாங்களாம்... அதிரடி 'திட்டம்' போடும் 'மத்திய' அரசு!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய அரசின் தொழில்நுட்ப கொள்கை மற்றும் தகவல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக கடந்த மாதம் டிக் டாக், ஹலோ, கேம் ஸ்கேனர், யுசி புரவுசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, மேலும் சில சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், முன்பு தடை செய்த சீன செயலிகளின் 'குளோன்’ (ஒரிஜினல் செயலிகளை போல இயங்கும் போலி செயலி) செயலிகளாக இயங்கிய 47 செயலிகளை மத்திய அரசு தற்போது தடை செய்துள்ளது.

தற்போது தடை செய்யப்பட்டுள்ள 47 செயலிகள் குறித்து விரைவில் தகவல் வெளியிடப்படும் என கருதப்பட்டு வரும் நிலையில், அடுத்ததாக 275 சீன செயலிகள் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், இந்த செயலிகள் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், இதன் காரணமாக இவற்றிற்கும் தடை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில் ஜியோமி, அலி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட செயலிகள் தடை செய்யப்பட வாய்ப்பு அதிகமுள்ளதாக தெரிகிறது. இந்த பட்டியலில் தற்போது இந்தியாவில் மிகவும் பிரபலமான பப்ஜி விளையாட்டு செயலியும் உள்ளதாக தெரிகிறது. இந்தியா மட்டுமில்லாது, பல உலக நாடுகளில் பப்ஜி மொபைல் கேம் மிகவும் பிரபலமாகும். இந்தியாவில் மட்டும் இந்த செயலியை 175 மில்லியனுக்கும் அதிகமான பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். முன்னதாக சீனாவின் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்ட போது, அது தொடர்பாக அதிக மீம்ஸ்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்