செல்லப் பிராணிகளால் உக்ரைனை விட்டு வர மறுக்கும் இந்திய மருத்துவர் –இதுதான் காரணமா?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

Content

Advertising
>
Advertising

உக்ரைனில் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றும் ஐதராபாத்தைச் சேர்ந்த மருத்துவர் தன் செல்லப் பிராணிகளை விட்டு இந்தியா வர மறுத்துள்ளார்.

ரஷ்யா உக்ரைன் போர் :


ரஷ்யா உக்ரைன் மீது கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரால் உலகப் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரஷ்யாவுக்கு அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. ஆனாலும் ரஷ்யா அதை பற்றிக் கவலைப்படாமல் உக்ரைன் மீது போர்த் தொடுத்து வருகிறது. ஈரான், பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ளன.

போரால் ஏற்படும் சேதம்:

நாட்கள் செல்ல செல்ல, போரின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், உக்ரைனின் பல முக்கிய நகரங்களைக் கைப்பற்ற வேண்டி, ரஷ்யா வேகமாக ஊடுருவி வருகிறது. உக்ரைன் எங்கும் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், அவர்களின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொது மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. அதுபோல இதுவரை 7000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரில் உக்ரைன் மக்கள்:

ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக, உக்ரைன் நாட்டினைச் சேர்ந்த மக்களும், தங்கள் நாட்டைக் காக்க வேண்டி, களத்தில் இறங்கி சண்டை போட்டு வருகின்றனர். அந்த வகையில், மற்ற நாட்டிலுள்ளவர்களும் தங்களின் ராணுவத்துடன் இணைந்து, போரிடலாம் என உக்ரைன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உக்ரைன் ராணுவத்தில் இணைந்து போரிட உள்ளதாக புகைப்படமும் செய்தியும் வெளியாகியுள்ளன.

இந்தியர்களை மீட்க அரசின் நடவ்டிக்கை:

இந்தியர்கள் சுமார் 20000 பேர் வரை உக்ரைன் நாட்டில் இருப்பதாக செய்திகள் வெளியாகினர். இதில் பெரும்பாலானவர்கள் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்காக சென்ற மாணவர்கள். அவர்களை உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, ரோமானியா, ஸ்லோவாக்கியா மற்றும் மால்டோவா ஆகிய நாடுகளின் வழியாக இந்திய அரசு மீட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த கிரிகுமார் பாட்டீல் என்ற 40 வயது மருத்துவர் நாடு திரும்ப மறுத்துள்ளார்.

மருத்துவர் சொல்லும் காரணம்:

உக்ரைனில் மருத்துவம் படித்த கிரிகுமார் 2014 ஆம் ஆண்டு முதல் அங்கு மருத்துவராக பணியாற்றி வருகிறார். மேற்கு மாகாணாத்தில் இப்போது டான்மாஸ் என்ற பகுதியில் இருக்கும் அவர் செல்லப் பிராணிகளாக ஒரு கருஞ்சிறுத்தை மற்றும் ஜாக்குவார் ஆகியவற்றை உயிரியல் பூங்காவில் இருந்து வாங்கி வளர்த்து வருகிறார். இப்போது போர் சூழலால் இந்தியர்கள் தாய்நாடு திரும்பி வரும் நிலையில் ‘இரண்டு சிறுத்தைகள் இல்லாமல் நான் இந்தியாவுக்கு திரும்ப மாட்டேன்’ எனக் கூறியுள்ளார். பிராணிகளை அழைத்து வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் ’போருக்கு நடுவே அருகாமையில் இருக்கும் கிராமத்தில் இருந்து சிறுத்தைகளுக்கு இறைச்சி வாங்கிக் கொடுப்பதாக சொல்லும் அவர், குண்டுவெடிப்பு சத்தத்தால் அவை இரண்டும் ஒழுங்காக சாப்பிடாமலும், தூங்காமலும் தவிப்பதாக’க் கூறியுள்ளார்.

UKRAINE, WAR, RUSSIA, INDIANS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்