‘எப்போ கொறையும்? எப்போ முடியும்?!’.. ‘கொரோனா-வை முன்பே கணித்த ஜோதிட சிறுவனின் ’வைரல்’ பதில்கள்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவை சேர்ந்த 14 வயது சிறுவன் அபிக்யா ஆனந்த் என்பவர் சிறுவயதிலேயே ஜோதிடம், வானியல் சாஸ்திரம் உள்ளிட்டவற்றில் நிபுணத்துவம் பெற்றவர் என்றும் ஜோதிட அறிவு அறிவுக்காக பல்வேறு பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர் ஒரு வீடியோ வெளியிட்டதாகவும் அதில் ஆகஸ்ட் 2019 முதல் ஏப்ரல் 2020 வரை உலகை மிகப்பெரிய நோய் அச்சுறுத்தும் என்பதை அழுத்திக் கூறியதாகவும் மிகவும் அரிதாக செவ்வாய், குரு, சனி, ராகு, சந்திரன் ஆகியவை சூரிய குடும்பத்தின் வெளி வளையத்தில் ஒரே நேர் கோட்டில் வந்ததால் இம்மூன்று கிரகங்களும் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் இவையெல்லாம் இணைவதால் அதிகமான கதிர்வீச்சு பூமியை தாக்கும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருந்துள்ளார்.
அதேநேரம் சந்திரனும் ராகுவும் இணைவது சக்தி வாய்ந்ததாகவும், உலகில் நோய்களை பரப்பும் என்றும் ஆனந்த் அதில் கணித்து கூறியுள்ளார். தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கும் வைரஸ்க்கும் இடையிலான போராக இருக்கும் சூழலில், இந்நோய்க்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் இந்த நோய் தாக்குதல் எப்போது குறையும் என்று மக்கள் தவித்து வருவதை காண முடிகிறது. இந்நிலையில் கொரோனா வைரசின் வேகம் எப்போது குறையும் என்று அபிக்யா ஆனந்த் கணித்து கூறியுள்ளார். அதன்படி ஏப்ரல் 1 வரை கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் ஆந்திரா, மேற்கு வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களிலும் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் ஏப்ரலுக்கு பின் படிப்படியாக குறைந்து மே 29-ல் வைரஸ் முடிவுக்கு வரும் என்று கூறியுள்ள அபிக்யா ஆனந்த், பொருளாதார வீழ்ச்சியும் நவம்பரில் முடிவுக்கு வரும் என்று கணித்து கூறியுள்ளார்.
தவிர இந்த நோய் பரவாமல் இருக்க தண்ணீருடன் மஞ்சள், எலுமிச்சை, தோல் சீவப்பட்ட இஞ்சி, துளசி ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து, அந்த ஆவி வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி தலைமீது துண்டை வைத்து அந்த ஆவியை நுகர வேண்டும் என்றும் அது மூக்கு துவாரத்தின் வழியே சென்று கிருமிகளை அழிக்க வல்லது என்றும் அதன்பின்னர் புத்துணர்ச்சி கிடைக்கும் என்றும் கூறியுள்ள அபிஜ்யா ஆனந்த் சூரிய ஒளியில் வெகு நேரம் இருக்கலாம் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நாங்க உயிரோட இருக்கும் போதே... இப்படியெல்லாம் பேசாதீங்க!'... வதந்திகளால் மனமுடைந்த கொரோனா நோயாளியின்... மனதை உருக்கும் கோரிக்கை!
- 'ஊரடங்கு உத்தரவால்... 200 கி.மீ நடந்தே சென்ற தொழிலாளி!'... வரும் வழியில் நிகழ்ந்த கோரம்... போலீஸார் உருக்கம்!
- சீனாவில் இருந்து தமிழகத்திற்கு கொரோனா படையெடுத்து வந்தது எப்படி!?... கொரோனா தொற்றின் பாதை விளக்கம்!... அதிர்ச்சியூட்டும் பின்னணி!
- “வேண்டிக்கிட்ட எல்லாத்துக்கும் இதயப்பூர்வ நன்றி!”.. ‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட கனடா பிரதமரின் மனைவிக்கு நடந்த அந்த மேஜிக்!’
- 'வீட்டுக்குள்ள இருந்துட்டா போதும், ஈஸியா தடுக்கலாம்' ... '21 நாட்கள்' ஊரடங்கு ஏன்? ... தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சொன்ன விளக்கம்
- ‘ஊரடங்கை மீறி வெளில வந்துராதீங்க!’... ‘அப்புறம் 14 நாள் இந்த தண்டனைதான்!’.. ‘அல்லு’ கிளப்பும் மத்திய அரசின் உத்தரவு!
- 'ஊரடங்கு உத்தரவுனால... சாப்பாடு இல்லாம யாரும் கஷ்டபடக்கூடாது!'... புதுக்கோட்டை விவசாயி செய்த பிரம்மிக்கவைக்கும் செயல்!... வீடு வீடாக நடத்திய அற்புதம்!
- கொரோனாவுக்கு பலியான முதல் ‘இளவரசி’! அரச குடும்பத்திற்குள் புகுந்த ‘ஆட்கொல்லி’ நோயால் நேர்ந்த சோகம்!
- VIDEO: "பொதுமக்கள ஏன் சார் அடிக்குறீங்க?... கமல் வீட்ல ஏன் நோட்டீஸ் ஒட்டுனீங்க?... கொரோனா டெஸ்ட் சரியா எடுக்குறீங்களா?"... அமைச்சர் ஜெயக்குமாருக்கு சரமாரி கேள்விகள்... அனல் பறக்கும் விவாதம்!
- பட்டினியால் இறப்பதைவிட சொந்த ஊருக்கே போறோம்... கோயம்பேட்டை மிஞ்சி... டெல்லி பேருந்து நிலையத்தை ஸ்தம்பிக்க வைத்த தொழிலாளர்கள்... அதிரவைக்கும் வீடியோ!