VIDEO: கொரோனா முன்கள வீரர்களுக்கு மரியாதை!.. பூ மழை பொழிந்த ஹெலிகாப்டர்கள்.. மனம் நெகிந்த மருத்துவர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸூக்கு எதிராக முன்களத்தில் நின்று போராடும் மருத்துவர்கள் உள்ளிட்டோரை முப்படையினரும் இன்று கௌரவிக்கும் வகையில் மருத்துவமனைகளின் மீது மலர்கள் தூவப்பட்டன.
கொரோனாவை வீழ்த்த போராடி வரும் மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உள்ளிட்டோர் முப்படைகள் சார்பில் கௌரவிக்கப்படுவார்கள் என முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்திருந்தார். இதன்படி காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து இரு சூப்பர் ஹெர்குலஸ் விமானங்கள் மருந்து பொருட்களுடன் கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு வந்தன. சுகோய், மிக் மற்றும் ஜாகுவார் ஆகிய 9 போர் விமானங்கள் டெல்லியின் வான்பரப்பில் பறந்து மருத்துவர்களை கௌரவித்தன.
தவிர மருத்துவமனைகள் மீது ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்களை தூவுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்ததையடுத்து மருத்துவமனைகள் முன்பு பேண்டு வாத்தியங்களும் இசைக்கப்பட்டன. அதன் படி மருத்துவமனைகளின் மீது பூ தூவப்பட்டது.
சென்னையில் கொரோனா சிகிச்சை அளித்துவரும் பிரதான மருத்துவமனைகளான ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகியவற்றின் மீது மலர்கள் தூவப்பட்டன. இதையடுத்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மருத்துவமனையின் வெளியே வந்து நின்று மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனா சூழலுக்கு தகுந்தவாறு திட்டமிடுவது எப்படி?.. 'நடப்புக் கல்வியாண்டு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் இல்லை!'... அதிரடியாக அறிவித்த அரசு!
- 'சென்னையில் ஒரே தெருவில் 40 பேருக்கு கொரோனா...' 'அதுவும் ஒரே குடும்பத்துல மட்டும் 12 பேருக்கு...' 'இங்க மட்டும் ஏன் வேகமா பரவுது...'
- 'அபார்ட்மெண்ட்டில் ஸ்கிரீனிங்!'.. 'பால்கனியில் ஆடியன்ஸ்!'.. ஊரடங்கில் புதுமையான பொழுதுபோக்கு!
- 'விபத்தில்' சிக்கிய இளைஞரால்... 'இரண்டு' நாட்களுக்கு பின் காத்திருந்த 'அதிர்ச்சி'... போலீசாரின் நிலை என்ன?
- 'இனிமேல் சின்ராச கையிலயே பிடிக்க முடியாது'... 'ஜாலி மூடில் சீனர்கள்'...ஓஹோ இது தான் காரணமா!
- 'கொரோனா' எங்க மேல ஏன் இவ்வளவு கோபம்'?... 'யாருக்கு யார் ஆறுதல் சொல்றது'...'நொறுங்கி போன அமெரிக்கா'... 'ஒரே நாளில் புரட்டி போட்ட பலி'
- 'பொண்ண எம்.பி.பி.எஸ் ஆக்கணும்' ... 'டெய்லர் தந்தையின் வைராக்கியம்'.... 'ஒரு நொடியில் தகர்ந்த மொத்த கனவு'... நொறுங்கி போன குடும்பம்!
- 'கொரோனா பரவலின் மையம் ஆனதா கோயம்பேடு?...' 'அரியலூர், கடலூர் சென்ற 27 தொழிலாளர்களால்...' 'ஊரடங்கை அறிவித்த மாவட்டங்கள்...'
- 'தமிழகத்தின் ஒரே பச்சை மண்டலத்திலும்...' 'உள்ளே நுழைந்தது கொரோனா...' '5 பகுதிகளுக்கு லாக்டவுன்...'
- 'சீனாவ அப்படி எல்லாம் சும்மா விட மாட்டேன்'... 'என்கிட்ட டாலர் இருக்கு'... 'டிரம்ப் கொளுத்திய வெடி'... இது எங்க போய் முடிய போகுதோ!