'இனிமேல் இங்கையும் நாங்க தெறிக்க விடுவோம்'...'இந்திய ராணுவ' வரலாற்றில் முதல் முறையாக!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய ராணுவ வரலாற்றில் முதல் முறையாக போலீஸ் படைப்பிரிவில் பெண்கள் சேர்க்கப்பட உள்ளார்கள்.இது பெண்களுக்கான மிக பெரிய கௌரவமாக கருதப்படுகிறது.
இந்தியாவின் தலைமை ராணுவத் தளபதியாக பிபின் ராவத் பொறுப்புக்கு வந்தபோது, ராணுவத்தின் அனைத்து மட்டத்திலும் பெண்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று உறுதியளித்திருந்த நிலையில்,தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்திய ராணுவத்தில் அதிகாரிகள் மட்டத்தில் மட்டுமே பெண்கள் சேர்க்கப்பட்டு வந்தனர். தற்போதுதான் இந்திய ராணுவ வரலாற்றில் முதன்முறையாக ராணுவத்தின் போலீஸ் படைப்பிரிவில் வீரர்களாகப் பெண்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
அமெரிக்கா, கனடா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே ராணுவத்தில் பெண் வீரர்கள் நியமிக்கப்படும் வழக்கம் இருந்து வருகிறது.சண்டையிடுவதில் பெண்களுக்கு இருக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்திய ராணுவத்தில் போலீஸ் படைப்பிரிவில் பெண்கள் நியமிக்கப்படுவதில்லை.இந்நிலையில் இந்தியாவின் தலைமை ராணுவத் தளபதியாக பிபின் ராவத் பொறுப்பேற்ற பிறகு,பல மாற்றங்களை கொண்டு வந்தார்.அந்த வகையில் ராணுவத்தின் போலீஸ் படைப்பிரிவில் பெண்களைச் சேர்ப்பதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே வருங்காலத்தில், ராணுவத்தின் அனைத்துப் பிரிவிலும் 20 சதவிகிதம் அளவுக்குப் பெண்கள் சேர்க்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ள பெண்கள், இந்திய ராணுவத்தின் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் ஜூன் 8 ஆகும்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஒரு வருடத்தில் 110 முறையா?’ இந்திய எல்லையில் பாகிஸ்தானின் தாக்குதல்.. அதிர்ச்சி ரிப்போர்ட்!
- 'அபிநந்தனுடன் வந்த பெண் யாரு'?...வழக்கம்போல் வதந்தியை கிளப்பிவிட்ட...'போலி நெட்டிசன்கள்'!
- 'கணவருக்கு இறுதி மரியாதை'...'விமானி உடையில் மனைவி'...வெள்ளத்தின் போது மக்களை காப்பாற்றியவர்!
- 'அபிநந்தனை' அழைத்துவர 'இந்தியா வைத்த கோரிக்கை'...'நிராகரித்த பாகிஸ்தான்'...பரபரப்பு தகவல்கள்!
- ' இந்திய விமானியை கைது பண்ணிட்டோம்'...கைகள் கட்டப்பட்ட நிலையில்...வெளியாகியிருக்கும் வீடியோ!