"சேவை தான் முக்கியம்".. இந்திய ராணுவ வீரரை துருக்கிக்கு அனுப்பி வைத்த கர்ப்பிணி மனைவி.. குழந்தைக்கு பெயர் தான்.. நெகிழ வச்ச தம்பதி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமனைவியின் பிரசவ நேரத்தில் துருக்கிக்கு மீட்புப் பணிக்காக சென்றிருக்கிறார் இந்திய ராணுவ வீரர் ஒருவர். தற்போது அவருக்கு மகன் பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | கோலி & ஜடேஜாவின் பதான் டான்ஸ்.. நடிகர் ஷாருக் கானின் கலகல கமெண்ட்.. வைரலாகும் வீடியோ..!
மத்திய கிழக்கு நாடான துருக்கியில் கடந்த வார திங்கட்கிழமை காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தென் மத்திய பகுதியில் உள்ள கசியான்டெப் நகருக்கு அருகே இந்த நிலநடுக்க மையம் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் அந்நாடே ஸ்தம்பித்துப்போனது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கையும் 35000 ஐ கடந்திருக்கிறது.
இதனையடுத்து பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவ பல நாடுகள் முன்வந்தன. அதன்படி மீட்புக்குழு, மருத்துவ குழு ஆகியவற்றை இந்தியா 'ஆப்பரேஷன் தோஸ்த்' எனும் பெயரில் அனுப்பியுள்ளது. அதில் இடம்பெற்றவர்களுள் ஒருவர் தான் உத்திர பிரதேசத்தை சேர்ந்த ராகுல் சவுத்ரி. இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக பணிபுரிந்து வரும் ராகுலுக்கு துருக்கி செல்ல வேண்டும் என உத்தரவு வந்திருக்கிறது. ஆனால், அவரது மனைவியோ நிறைமாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். இன்னும் சில நாட்களில் பிரசவம் நிகழலாம் என்னும் நிலையில் தனது மனைவியிடத்தில் இதனை சொல்லியிருக்கிறார் ராகுல்.
Images are subject to © copyright to their respective owners.
ஆனால், அவரது மனைவியோ, தேசத்திற்கு சேவை செய்வது தான் முதன்மையாக இருக்க வேண்டும் எனக்கூறி ராகுலை துருக்கிக்கு வழியனுப்பி வைத்திருக்கிறார். ராகுல், துருக்கி சென்று சேர்ந்ததும் அவருக்கு மகன் பிறந்திருக்கும் செய்தி அவரிடத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பேசியுள்ள ராகுல்," துருக்கியில் நான் தரையிறங்கியதும் எனக்கு மகன் பிறந்திருப்பதாக சக ராணுவ வீரர் சம்பி கமலேஷ் என்னிடத்தில் தெரிவித்தார். இதனால் நான் பெரும் மகிழ்ச்சியடைந்தேன். என்னுடைய நண்பர்களும் சக ராணுவ வீரர்களும் குழந்தைக்கு 'துர்கி சவுத்ரி' என பெயரிடும்படி பரிந்துரை செய்திருக்கின்றனர்" என்றார்.
Images are subject to © copyright to their respective owners.
பிரசவம் நெருங்கிவிட்ட போதிலும் தேசப்பணியே முக்கியம் என முடிவெடுத்த இந்த தம்பதியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Also Read | Hardik Pandya : பிரம்மாண்டமாக நடைபெற்ற பாண்ட்யாவின் திருமணம்.. வீடியோ..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ரூ. 247 கோடியை நன்கொடையா கொடுத்துட்டு பெயரை கூட சொல்லாம போன மர்ம மனிதர்.. திகைச்சுப்போன அதிகாரிகள்..!
- துருக்கி பூகம்பம்.. இடிபாடுகளில் சிக்கிய இளைஞர்.. உயிரை காப்பாத்திய வாட்சப் ஸ்டேட்டஸ்..!
- "கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்".. துருக்கியை புரட்டிப்போட்ட பூகம்பம்.. கவிப்பேரரசு வைரமுத்து பகிர்ந்த உருக்கமான கவிதை..!
- உருக்குலைந்த 2200 வருச பழமையான கோட்டை.. உலகையே கதிகலங்க வெச்ச நிலநடுக்கம்!!
- துருக்கியை நிலைகுலைய செய்த பூகம்பம்.. 2400 பேர் பலி.. நிவாரண பொருட்கள் & மீட்பு படையை அனுப்பும் இந்தியா.. முழு விபரம்..!
- ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் துருக்கியில் மரணம்.. இந்தியாவில் நடைபெறும் இறுதிச்சடங்கு.. யார் இந்த முக்காராம் ஜா பகதூர்?
- இந்திய ராணுவத்துக்கு பறந்த திருமண பத்திரிக்கை.. "அதுல இருந்த விஷயம் தான் இப்ப செம ட்ரெண்டிங்"!!
- இறப்பதற்கு முன் மலை உச்சியில் செல்ஃபி எடுத்த மனைவி.. கைதான கணவர்.. என்ன நடந்தது.? உறைய வைக்கும் பின்னணி!!
- அடேங்கப்பா, உடைஞ்சது 12,000 வருச 'மர்மம்'!!.. 10 வருஷ உழைப்புக்கு கிடைத்த விடை!!..
- காதலியை பிடிச்சுட்டு மலையில் இருந்து குதித்த காதலன்.. "அவரு சொன்ன கடைசி வார்த்தை'ய கேட்டு.." உறைந்து போன நண்பர்கள்