'பனியில் புதைந்த நிலையில் கிடைத்த உடல்'... '8 மாதங்களாக ரண வேதனையை அனுபவித்த குடும்பம்'... சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வருபவர் ராஜேந்திர சிங் நேகி. 36 வயதான இவருக்கு, காஷ்மீர் எல்லையில் பணி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குல்மார்க் எனும் இடத்தில் கடந்த ஜனவரி மாதம் இவருக்குப் பணி வழங்கப்பட்டிருந்தது. ஜனவரி மாதம் என்பதால் பனிப் பொழிவு அதிகமாகக் காணப்பட்டது. அந்த நேரத்தில் நேகி திடீரென காணாமல் போனார். அவர் என்ன ஆனார் என்பது குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

இந்நிலையில் ராணுவத்தினர் மற்றும் போலீஸாருடன் இணைந்து அவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இருப்பினும் ராஜேந்திர குமார் நேகியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து அவர் வீர மரணம் அடைந்துவிட்டதாகக் கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. ராஜேந்திர சிங் நேகிக்கு என்ன ஆனது என்பது குறித்து எந்த தகவலும் இல்லாததால், அவரது குடும்பத்தினர் கடந்த 8 மாதங்களாக கடும் வேதனையை அனுபவித்து வந்துள்ளார்கள்.

இந்நிலையில் பனியில் புதைந்த நிலையில் ராஜேந்திர குமார் நேகியின் உடல் காஷ்மீர் எல்லைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உடல் ராஜேந்திர குமார் நேகியின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 8 மாதங்களாகப் பரிதவிப்பிலிருந்த குடும்பத்தினர், அவரது உடலைப் பார்த்துக் கதறி அழுதார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்