"2 முறை சுட்டுட்டாங்க.. ஆனாலும் அது விடல".. ரகசிய ஆப்பரேஷனில் களமிறங்கிய ராணுவத்தின் சிறப்பு நாய்.. தனியா நின்னு செஞ்ச சம்பவம்.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் இந்திய ராணுவத்தை சேர்ந்த சிறப்பு நாய் ஒன்று காயமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அந்த நாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Also Read | "இனி பெண்களும் தைரியமா நைட்ல வெளில வருவாங்க".. கேரள MLA போட்ட ஒரு ஆர்டர்.. களைகட்டிய கடவுளின் தேசம்..!
ZOOM
காஷ்மீரின் வடக்கு மாவட்டமான Tangpawa-வில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து பாதுகாப்புடை அதிகாரிகள் அந்த இடத்தில் ரகசிய பரிசோதனையை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில், நேற்று காலை அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இந்திய ராணுவத்தின் சிறப்பு நாயான zoom அப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டது.
அப்போது, இரண்டு தீவிரவாதிகள் இருந்த வீட்டுக்குள் நாய் நுழைந்திருக்கிறது. அப்போது, நேர்ந்த மோதலில் தீவிரவாதிகள் நாயை இரண்டு முறை சுட்டிருக்கின்றனர். ஆனாலும், குண்டடி பட்டபோதிலும் அந்நாய் தொடர்ந்து போராடியிருக்கிறது. இதனிடையே ராணுவ வீரர்கள் இரண்டு தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றிருக்கின்றனர். இதில் படுகாயமடைந்த ZOOM நாய் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை
இந்நிலையில், ZOOM நாய் குறித்து இந்திய ராணுவம் ட்வீட் செய்திருக்கிறது. அதில்,"காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் நடைபெற்ற தீவிரவாதிகளுடனான தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு ராணுவ நாய் காயமடைந்திருக்கிறது. அந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. வீரர்களின் உடல்நிலை சீராக உள்ளது. படுகாயமடைந்த இந்திய ராணுவத்தின் அசால்ட் நாய் ZOOM ஸ்ரீநகரில் உள்ள ராணுவ கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறது. அது விரைவில் நலம்பெற வாழ்த்துகிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ZOOM நாய் பயிற்சி பெறும் வீடியோவையும் ராணுவம் பகிர்ந்திருக்கிறது.
இதுகுறித்து பேசியுள்ள அதிகாரிகள்,"ZOOM பயிற்சி பெற்ற அதீத திறமைகளை கொண்ட மூர்க்கமான நாய். தீவிரவாதிகளை கண்டுபிடித்து வீழ்த்துவதற்கு அதற்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுடனான மோதலில் கடுமையான காயங்கள் இருந்தபோதிலும், துணிச்சலாக ZOOM போராடியது. அதன் விளைவாக இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு முன்பே இந்நாய் பல சிறப்பு ராணுவ ஆப்பரேஷன்களில் பங்குபெற்றிருக்கிறது" என்றனர்.
மற்ற செய்திகள்