VIDEO: தீவிரவாதியிடம் அன்பாகப் பேசி... மனதை மாற்றிய இந்திய ராணுவம்!.. அடுத்து காத்திருந்த 'அதிர்ச்சி'!.. எல்லையில் நெகிழவைக்கும் தந்தை-மகன் பாசப் போராட்டம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையின்போது ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி ஒருவர் பாதுகாப்புப் படையினர் முன்பு சரணடைந்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் பகுதியில் கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது இளம் பயங்கரவாதி ஒருவர் பாதுகாப்புப் படையினர் முன் சரணடைந்தார் என்று இந்திய ராணுவம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், பழத்தோட்டம் போன்ற பகுதியில் ஒரு பாதுகாப்பு வீரர், போர் பாதுகாப்பு கியர் அணிந்து, துப்பாக்கியுடன் நிற்கிறார். அவர் பயங்கரவாதியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது அந்த பயங்கரவாதியிடம் இங்கு யாரும் சுட மாட்டார்கள் என உறுதியளிக்கிறார். மேலும், தனது சக வீரர்களிடமும் யாரும் சுட வேண்டாம் எனக் கூறுகிறார்.

பின்னர், அங்கு மறைந்திருந்த பயங்கரவாதி தனது கைகளை மேலே தூக்கிக்கொண்டு வந்து போர் வீரரிடம் சரணடைகிறார். அவர் அந்த பயங்கரவாதியை கீழே அமைதியாக அமரச் சொல்லி அவருக்கு தண்ணீர் கொடுங்கள் எனக் கூறுகிறார். மேலும், அந்த இளைஞர் காட்டிய இடத்தில் இருந்து ஒரு ஏ.கே.47 துப்பாக்கியையும் வீரர்கள் பறிமுதல் செய்கின்றனர்.

                                        

ராணுவம் வெளியிட்ட மற்றொரு வீடியோவில், சரணடைந்த நபரின் தந்தை, தனது மகனைக் காப்பாற்றிய பாதுகாப்புப் படையினருக்கு நன்றி தெரிவிக்கிறார். மேலும், மகனை மீண்டும் பயங்கரவாதிகளுடன் செல்ல விடாதீர்கள் என்று வீரர்கள் தந்தைக்கு அறிவுரை கூறுகிறார்கள். அந்த இளைஞர் சில நாட்களுக்கு முன்பே பயங்கரவாத கூட்டத்தில் இணைந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, ராணுவம் கூறுகையில், "அக்டோபர் 13ம் தேதி சிறப்பு காவல் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டார். அதே நாளில், சடூராவைச் சேர்ந்த ஜஹாங்கிர் ஆ பட் என்ற இளைஞர் காணாமல் போனார். அவரது குடும்பம் அவரை கண்டுபிடிக்க முயற்சி செய்தது.

இதனிடையே போர் வீரர்கள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது அந்த நபரை சுற்றி வளைத்தனர். நெறிமுறையின்படி, இந்திய இராணுவம் தனிநபரை சரணடையச் செய்ய முயற்சித்தது. அதன்படி அவர் சரணடைந்தார். அந்த நபரின் தந்தை அந்த இடத்தில் இருந்தார்.

மேலும், இளைஞர்களை பயங்கரவாதத்திலிருந்து திரும்பச் செய்வதற்கான முயற்சிகளும் அங்கிருந்தது தெரிந்தது. பயங்கரவாத ஆட்சேர்ப்பைத் தடுக்க இந்திய இராணுவம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இளைஞர்கள் பயங்கரவாதத்தில் இணைந்தால் திருத்தி கொண்டுவரும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது" எனத் தெரிவித்துள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்