Job Alert: இந்திய விமானப் படையில் வேலை வாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் இளைஞர்கள் பலருக்கு இந்திய பாதுகாப்பு படைகளில் சேரும் ஆர்வம் சமீப காலமாகவே அதிகரித்துவருகிறது. மேலும், பாதுகாப்பு பிரிவுகளில் அப்ரண்டிஸ் பயிற்சி பெற இளைஞர்களை சேர்க்க அவ்வப்போது அறிவிப்புகள் வெளியாகும். இதற்காக பல படித்த இளைஞர்கள் காத்திருந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களை மகிழ்விக்கும் வகையில் இந்திய விமானப்படையில் 80 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு ஏர்போர்ஸ் அப்ரண்டிஸ் பயிற்சி மூலம் நிரப்புவதற்கான அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. இதுகுறித்து கீழே விரிவாகக் காணலாம்.
காலியிடங்களின் எண்ணிக்கை:
மெஷினிஸ்ட்: 04 இடங்கள்
ஷிட் மெட்டல்: 07 இடங்கள்
வெல்டர் கேஸ் & எலெக்ட்: 06 இடங்கள்
மெக்கானிக் ரேடியோ ரேடார் விமானம்: 09 இடங்கள்
தச்சர்: 03 இடங்கள்
எலக்ட்ரீசியன் ஏர்கிராப்ட்: 14 இடங்கள்
பெயிண்டர் ஜெனரல்: 01 இடங்கள்
பிட்டர்: 26 இடங்கள்
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் 10வது அல்லது 12வது இடைநிலை வகுப்பு தேர்ச்சி மற்றும் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். இதுதவிர, ஐடிஐ-யில் தேர்ச்சி மற்றும் 65% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்திய விமானப் படையில் காலியாக உள்ள இந்த பணியிடங்களில் சேர விண்ணப்பிக்கும் இளைஞர்கள் 14 முதல் 21 வயது கொண்டவர்களாக இருத்தல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியம்
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 7700 ரூபாய் ஊதியமாக அளிக்கப்படும் என விமானப் படை அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாகவே ஏற்கப்படும் என விமானப்படை தெளிவுபடுத்தியுள்ளது. அந்த அறிக்கையின்படி, 01 ஏப்ரல் 2022 அன்று தொடங்கும் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 19, 2022 ஆகும்.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் www.indianairforce.nic.in அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Job Alert : 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு CISF ல் வேலை - சூப்பர் சம்பளம்.. விண்ணப்பிப்பது எப்படி?
- கட்டம் கட்டித் தூக்கிய ரோஹித் ஷர்மா.. கூடவே கோலியும் போட்ட 'ஸ்கெட்ச்' பக்கா.. குழம்பி நின்ற பேட்ஸ்மேன்
- இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. சிரிச்சிக்கிட்டே ரோஹித் சொன்ன வார்த்தை.. எகிறும் எதிர்பார்ப்பு..!
- கல்வான் பள்ளத்தாக்கு விவகாரம் .. '4 அல்ல 41 பேர் பலி'.. தப்பிக்க சீனா ராணுவத்தினர் செய்த பகீர்.. வெளியான தகவல்
- SSC அறிவிப்பு: +2 படிச்சிருந்தா போதும் 80,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
- அசந்தா.. ஆப்புதான்.. "இந்திய பவுலர்களை.... முடியல.." - கதறும் தென்னாப்பிரிக்க வீரர் ..!
- தமிழ்நாடு வருமான வரித்துறையில் அசத்தலான வேலைவாய்ப்பு: விண்ணப்பிப்பது எப்படி?
- கொஞ்சமாவது பொறுப்பா நடந்துக்கங்க பண்ட் – ரிஷப் பண்டை விளாசிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்..!
- பேராபத்து.. ஓமிக்ரான் தொற்றே இன்னும் முடியல.. அதற்குள் பல வேரியண்ட்டா? WHO வார்னிங்
- இந்தியாவில் 'ஒமைக்ரான்' வைரஸ் 'என்ன' பண்ண போகுது...? - தென் ஆப்பிரிக்க நிபுணர் 'அதிர்ச்சி' தகவல்...!