'பீக் டைம்ல கட்டணத்தை 1.5 மடங்கு உயர்த்தலாம்'... 'ஓலா, உபரில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்'... மத்திய அரசின் அதிரடி உத்தரவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வாடகைக் கார் நிறுவனங்களான ஓலா, உபர் போன்ற நிறுவனங்களின் விதிமுறைகளில் மத்திய அரசு பல அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.

'பீக் டைம்ல கட்டணத்தை 1.5 மடங்கு உயர்த்தலாம்'... 'ஓலா, உபரில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்'... மத்திய அரசின் அதிரடி உத்தரவு!

இந்தியாவில் வாடகைக் கார் நிறுவனங்களான ஓலா, உபர் ஆகியவை மக்களிடையே மிகவும் பிரபலம். தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் இவற்றைப் பயன்படுத்தி வரும் நிலையில், இந்த நிறுவனங்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயித்து வருவதால், அதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர். இதையடுத்து புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மோட்டார் வாகன நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது, ''ஓலா, உபர் போன்ற வாடகைக் கார் நிறுவனங்கள் பரபரப்பான நேரத்தில் தங்கள் அடிப்படைக் கட்டணத்திலிருந்து 1.5 மடங்கு கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம். அதேசமயம், வாடகைக் காருக்கு குறைவான தேவை இருக்கும் காலகட்டத்தில், நேரத்தில் அடிப்படைக் கட்டணத்திலிருந்து 50 சதவீதம் குறைவாகவும் கட்டணத்தை நிர்ணயித்துக்கொள்ளவும் அனுமதியளிக்கப்படுகிறது.

India will allow app-based taxi aggregators to charge up commissions

மேலும் வாடகைக் கார் நிறுவனத்தோடு இணைந்து பணியாற்றும் கார் வைத்திருக்கும் ஓட்டுநர்களுக்குக் கட்டணத்தில் 80 சதவீதத்தை வாடகைக் கார் நிறுவனங்கள் வழங்கிட வேண்டும். சில மாநிலங்களில் வாடகைக் காருக்கான கட்டணத்தை மநில அரசுகள் முடிவு செய்வதில்லை. அதுபோன்ற மாநிலங்களில் அடிப்படைக்கட்டணம் ரூ.25 முதல் ரூ.30 வரை நிர்ணயிக்கலாம்.

இதனிடையே சக பயணிகளுடன் கட்டணத்தைப் பகிர்ந்து கொள்ளும்(ஷேர் டாக்ஸி) முறை இனி பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். அவ்வாறு ஷேர் டாக்ஸியில் முன்பதிவு செய்த பெண்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்தால், கட்டணத்திலிருந்து 10 சதவீதத்தை வசூலிக்க ஓட்டுநர்களுக்கு உரிமை உண்டு'' என விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்