'கொரோனா'வுக்கு எதிராக... பல்நோக்கு தடுப்பூசியை 'கையில்' எடுத்த இந்தியா... '6 வாரங்களில்' முடிவு தெரிந்து விடும்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸ்க்கு எதிராக பல்நோக்கு தடுப்பூசியை இந்தியா சோதனை செய்து வருவதாக இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் கூறி உள்ளார்.

உலகம் முழுவதும் மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிரான மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் பலவும் முயற்சி செய்து வருகின்றன. அமெரிக்கா, சீனா உட்பட ஏராளமான நாடுகள் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவும் இந்த முயற்சியில் தீவிரமாக இயங்கி வருகிறது.

இந்த நிலையில் தொழு நோய்க்கு எதிராக பரிசோதிக்கப்பட்டு வரும் பல்நோக்கு தடுப்பூசியை கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்த முடியுமா? என்று இந்திய விஞ்ஞானிகள் பரிசோதனை செய்ய ஆரம்பித்து இருக்கின்றனர்.

இதுகுறித்து அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சி.எஸ்.ஐ.ஆர்) இயக்குநர் ஜெனரல் டாக்டர் சேகர் மண்டே கூறுகையில், ''டி.சி.ஜி.ஐ (இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரல்) ஒப்புதலுடன், தொழுநோய்க்கு எதிராக வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்ட சக்தி வாய்ந்த தடுப்பூசி குறித்த சோதனைகளை நாங்கள் தொடங்கி உள்ளோம்,

தடுப்பூசி தயாரிப்பது ஒரு நீண்ட செயல்முறையாகும். ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் ஒரு தடுப்பூசியை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இன்னும் இரண்டு ஒப்புதல்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அவை கிடைத்தவுடன், சோதனைகளைத் தொடங்குவோம்.  அடுத்த ஆறு வாரங்களுக்குள் முடிவுகள் கிடைத்துவிடும்,'' என தெரிவித்து இருக்கிறார்.

முன்னதாக கொரோனா குடும்பத்தின் மரபணுவை குஜராத் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக வரிசைப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்