"6 நாளில்.. 11 லட்சத்து 36 ஆயிரம் கோடி!".. கொரோனாவால் மளமளவென சரிந்த முதலீடுகள்!!.. பெரும் சிக்கலில் முதலீட்டாளர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் முதலீடுகள் ஆறே நாட்களில் சரிந்து இந்திய பங்குச்சந்தையில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு இரண்டாவது அலை உண்டாகி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில் பொருளாதார நிலைமை இன்னும் மோசமாகிக்கொண்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இவையெல்லாம் இந்திய முதலீட்டாளர்களிடம் மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது. அதன் விளைவாக இந்திய பங்குச் சந்தை கடந்த 16ம் தேதி முதல் தொடர்ந்து இறங்குமுகமாக உள்ளது தெரியவந்துள்ளது.

நேற்று மட்டும் ஒரே நாளில் 4 லட்சம் கோடி ரூபாயும் இந்த ஆறு நாட்களில் 11 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாயும் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்