உலகிலேயே கொரோனா 'மரணம்' குறைவாக உள்ள நாடு... மத்திய அரசு தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனாலும் கொரோனாவில் இருந்து குணமடைவோரின் சராசரி விகிதம்(62.62%)  மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகமாக உள்ளது. அதேபோல கொரோனா மரணம் குறைவான நாடுகளில் ஒன்றாகவும் நமது நாடு திகழ்கிறது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், உலகிலேயே கொரோனா மரணம் குறைவான நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இங்கு இறப்பு விகிதம் 2.46% குறைந்துள்ளது. இதற்கு நோயாளிகளை கண்டறிந்து உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதும், கொரோனாவை ஒடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதும்தான் காரணங்கள் என்று கூறப்படுகிறது.

இதுதவிர 11 மாநிலங்களில் 43 பெரிய மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் இணையவழி ஆலோசனைகளை வழங்குவதும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்