'உலக அளவில்' கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பட்டியலில், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளை பின்னுக்கு தள்ளி, இந்தியா பிடித்துள்ள இடம் இதுதான்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
Advertising

இந்தியாவில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள தொற்றின் அடிப்படையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 9 ஆயிரத்து 887 பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 294 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.‌   இந்தியாவில் ஒட்டுமொத்தமாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 2 லட்சத்து 36 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக 6,642 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 600-ஐ தாண்டியுள்ளது. கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இங்கிலாந்து நாடுகளைத் தொடர்ந்து இந்தியா வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்