பெட்ரோல் விலைக்கு செக்...! 'அமெரிக்கா உள்பட 3 நாடுகளுக்குள் நடந்த மீட்டிங்...' - இந்தியா அதிரடி முடிவு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதனால் , அதை கட்டுப்படுத்துவதற்காக, இருப்பாக வைக்கப்பட்டுள்ள, 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை விடுவிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Advertising
>
Advertising

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை படிப்படியாக குறைப்பதற்காக, உற்பத்தியை அதிகரிக்கும்படி, பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் 'ஓபெக்'அமைப்பிடம் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

ஆனால், உற்பத்தியை அதிகரிக்க மாட்டோம் என ஓபெக் மற்றும் அதன் நட்பு நாடுகள் மறுத்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில், விலையை குறைப்பதற்கு ஏதுவாக, தங்களிடம் இருப்பில் உள்ள கச்சா எண்ணெயை விடுவிக்கும்படி, இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளிடம் அமெரிக்கா கோரிக்கை வைத்தது.

இந்தியாவும், அதிகளவு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதால், விலை உயர்வு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்க, அமெரிக்கா உள்ளிட்ட 3 நாடுகளுடன் நடந்த இந்தியா முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், 'நாட்டில், முதல்முறையாக, அவசர கால தேவைக்காக கையிருப்பில் வைத்துள்ள கச்சா எண்ணெயில் இருந்து, 50 லட்சம் பீப்பாய்களை விடுவிக்க முடிவு செய்துள்ளது.

நாட்டின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில், 3 இடங்களில் நிலத்திற்கு அடியே 3.8 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது.
விடுவிக்கப்படும்அதிலிருந்து, 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய், அடுத்த 10 நாட்களுக்குள் விடுவிக்கப்படும். இவை, இருப்பு வைக்கப்பட்ட இடத்தில் இருந்து குழாய் வழியாக இணைக்கப்பட்டுள்ள, மங்களூரு சுத்தி கரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனம், ஹிந்துஸ்தான் நிறுவனம் போன்றவற்றிக்கு நேரடியாக வழங்கப்படும்.' என தெரிவித்துள்ளார்.

CRUDE OIL, INDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்