"கர்ப்பமான ஆண்?".. இந்தியாவில் முதல் முறை..! கவனம் ஈர்த்த மூன்றாம் பாலின தம்பதி!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரள மாநிலம், கோழிக்கோடிலுள்ள உம்மலத்தூர் என்னும் பகுதியை சேர்ந்த தம்பதி சஹத் - ஜியா ஆகியோர். மூன்றாம் பாலின தம்பதிகளான இவர்கள் உள்ளனர்.

Advertising
>
Advertising

                                Image Credit : Ziya Paval Instagram

Also Read | கிளி பார்த்த வேலை.. உரிமையாளருக்கு ₹74 லட்சம் அபராதம் விதித்த கோர்ட்.. விநோத பின்னணி..!

இதில் சஹத் பெண்ணாக பிறந்து ஆணாக மாறினார். அதே போல, ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர் ஜியா. இந்த மூன்றாம் பாலின தம்பதி தங்களின் முதல் குழந்தையை வரவேற்க காத்திருக்கும் செய்தி தான் தற்போது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

இன்னும் ஒரு சில மாதங்களில், அந்த குழந்தை பிறக்கவுள்ள சூழலில், இந்தியாவில் குழந்தையை பெற்றெடுக்கும் முதல் மூன்றாம் பாலின தம்பதியாகவும் இவர்கள் உருவெடுத்துள்ளனர்.

முன்னதாக, சஹத் மற்றும் ஜியா ஆகிய இருவரும் சேர்ந்து குழந்தை வேண்டும் என்றும் விரும்பி உள்ளனர். மேலும் ஆரம்பத்தில் குழந்தை ஒன்றையும் அவர்கள் தத்தெடுக்க முடிவு செய்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அதன் பின்னர் தங்கள் மூலமாக குழந்தையை பெற்றுக் கொள்ள முடியுமா என்பதையும் மருத்துவர்களிடம் கேட்டு ஆலோசித்தனர்.

Image Credit : Ziya Paval Instagram

அவர்கள் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய சஹத் தாயாகவும், ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய ஜியா தந்தையாகவும் முடியும் என்றும் கூறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த நிலையில் ஜியா மூலம் கருவுற்ற சஹத், வரும் மார்ச் மாதம் குழந்தை ஒன்றை பெற்றெடுக்கவும் உள்ளார்.

முன்னதாக, பாலின மாற்று அறுவை சிகிச்சையின் போது சஹத்தின் கருப்பை உள்ளிட்ட உறுப்புகள் அகற்றப்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றது. இதனிடையே, தற்போது 8 மாத கர்ப்பமாக இருக்கும் சஹத் மற்றும் ஜியா ஆகியோர் இணைந்து சமீபத்தில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள், இணையவாசிகள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.

Also Read | "ஒரு உயிர் வரபோற நேரத்துல".. கர்ப்பிணி பெண், கணவர் பயணித்த காரில்.. திடீரென நடந்த அசம்பாவிதம்!!

KERALA, TRANSMAN, TRANSMAN PREGNANCY PHOTOSHOOT, INDIA FIRST TRANSMAN PREGNANCY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்