இந்தியாவில் பதிவான முதல் குரங்கு அம்மை தொற்று... சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த பயணி ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertising
>
Advertising

குரங்கு அம்மை

வைரஸ் தாக்குதலால் ஏற்படும் அரியவகை நோய் தான் இந்த குரங்கு அம்மை. இதில் மொத்தம் இரண்டு வகை மரபணுக்களை கொண்ட வைரஸ்கள் இருக்கின்றன. முதலாவது பிரிவைச் சேர்ந்த வைரஸ், மத்திய ஆப்பிரிக்க நாடுகளிலும் இரண்டாவது வகை மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் கண்டறியப்பட்டது.

குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் ஆகியவை ஏற்படலாம். மேலும், இந்த நோயின் அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் சிகப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். பின்பு அவை கொப்பளங்களாக மாறும். அடுத்த 2-4 வாரங்களில் இந்தக் கொப்பளங்கள் மறைந்து உதிர்ந்து விடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

முதல் தொற்று

இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த பயணி ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு வந்த இப்பயணியை பரிசோதிக்கும் போது அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுபற்றி பேசிய அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ்,"அச்சப்பட ஒன்றுமில்லை. அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. நோயாளி நிலையாக இருக்கிறார். அவரது தந்தை, தாய், ஒரு டாக்ஸி டிரைவர், ஒரு ஆட்டோ டிரைவர் மற்றும் 11 சக பயணிகள் உட்பட அவரது முதன்மை தொடர்புகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன" என்றார். இதன்மூலம் இந்தியாவில் முதல் குரங்கு அம்மை தொற்று பதிவாகியுள்ளது.

முன்னதாக வெளிநாட்டில் இருந்து திரும்பிய ஒருவருக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அவரது ரத்த மாதிரிகள் தேசிய ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு இன்று கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளது.

MONKEYPOX, KERALA, INDIA, குரங்குஅம்மை, நோய்த்தொற்று, கேரளா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்