இந்தியாவுல இவரு ஒருத்தருக்கு தான் இந்த வகை ரத்தம் இருக்கு.. உலகத்துல மொத்தமே 9 பேர் தான் இப்படி இருக்காங்களாம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் முதல்முறையாக குஜராத்தை சேர்ந்த ஒருவருக்கு மிக மிக அரிய வகை ரத்த வகை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | "லைன்ல வந்ததுக்கு நன்றி அண்ணா".. முதல்வரை பாராட்டி கடிதம் எழுதிய எம்ஜிஆர் ரசிகர்.. போனில் இன்ப அதிர்ச்சி கொடுத்த CM ஸ்டாலின்..!

பொதுவாக மனிதர்களுக்கு ‘A’, ‘B’, ‘O’ அல்லது ‘AB’ வகை ரத்தம் இருக்கும். இதன்மூலம் மருத்துவ சிகிச்சைகளின் போது, எளிதாக அவர்களுக்கு தேவையான ரத்த வகைகளை மருத்துவர்களால் பெற்று சிகிச்சையை தொடர முடியும். இதற்காகவே சிறப்பு ரத்த தான மையங்கள் மற்றும் ரத்த வங்கிகள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. அவசர காலங்களில் இதுபோன்ற ரத்த வங்கிகளில் இருந்து சிகிச்சை பெறுபவரின் ரத்த வகை பெறப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படும். அப்படி குஜராத்தை சேர்ந்த நபருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.

சிகிச்சை

குஜராத்தின் அகமதாபாத்தில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் 65 வயது முதியவர் இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சைக்கு ரத்தம் தேவைப்பட்டதால், அவருடைய ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. குஜராத்தின் ப்ரத்தாமா ஆய்வகத்துக்கு முதியவரின் ரத்தம் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

ஆனால், அவருடைய ரத்தம் வேறு எந்த மாதிரியுடன் ஒத்துப்போகவில்லை. இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள், சூரத்தில் உள்ள ரத்த தான வங்கிக்கு மாதிரிகளை அனுப்பியிருக்கிறார்கள். அங்கேயும் அவருடைய ரத்தம் என்ன வகை என்பது கண்டுபிடிக்கப்படாமல் போகவே, வேறு வழியின்றி ரத்தத்தை அமெரிக்காவுக்கு அனுப்ப முடிவெடுத்துள்ளனர் மருத்துவர்கள்.

அரிய வகை ரத்தம்

முதியவரின் உறவினர் ஒருவர் ரத்தத்தை அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். அங்கு ஆய்வுக்கு உட்படுத்தும்போதுதான் இது 'EMM நெகட்டிவ்' என்னும் மிக மிக அரிய வகை ரத்த வகை என்பதை நிபுணர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். பொதுவாக, மனித உடலில் நான்கு வகையான இரத்தக் குழுக்கள் உள்ளன. அவை A, B, O, Rh மற்றும் Duffy போன்ற 42 வகையான அமைப்புகளைக் கொண்டிருக்கின்றன. EMM அதிகமாக இருக்கும் 375 வகையான ஆன்டிஜென்களும் உள்ளன.

ஆனால், உலகத்தில் சிலருக்கு மட்டும் EMM அளவு மிகக்குறைவாக இருக்கும் எனவும் இதனை EMM  நெகட்டிவ் வகை ரத்தம் என வகைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அறிவித்திருக்கிறது சர்வதேச இரத்தமாற்ற சங்கம் (ISBT). இதன்படி இந்த ரத்தத்தினை கொண்டவர்கள் பிறருக்கு தங்களது ரத்தத்தை வழங்கவோ, பிறரிடம் இருந்து ரத்தத்தை பெறவோ முடியாது.

இந்த வகையான ரத்ததை கொண்டவர்கள் உலகிலேயே 9 பேர் மட்டுமே இருப்பதாகவும், தற்போது இந்த எண்ணிக்கை குஜராத் முதியவருடன் சேர்த்து 10 ஆக உயர்ந்திருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதேபோல, இந்தியாவில் முதன் முறையாக இந்த வகை ரத்தம் ஒருவருக்கு இருப்பது இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read | "கோதுமைன்னு சொல்லி இதை வளர்த்திருக்காங்க சார்".. போலீசுக்கு போன் செஞ்ச முன்னாள் MLA.. பெங்களூருவில் சுவாரஸ்யம்..!

GUJARAT, BLOOD GROUP, WORLD TENTH UNIQUE BLOOD GROUP, MAN, UNIQUE BLOOD GROUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்