இந்தியாவில் 'எப்போது' கொரோனா பாதிப்பு 'உச்சத்தை' தொடும்?... இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 'பதில்'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எப்போது உச்சத்தை தொடும் என்பதை கூறுவது கடினம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டி பிரதமர் மோடியின் அறிவிப்புபடி நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரித்தவாறே உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் எப்போது உச்சத்தை தொடும் என்ற கேள்விக்கு ஐசிஎம்ஆர் பதிலளித்துள்ளது.

இதுகுறித்துப் பேசியுள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மருத்துவர் பல்ராம் பார்கவா, "இந்தியாவில் கொரோனா பாதிப்பு எப்போது உச்ச அளவை தொடும் என்பதை கூறுவது கடினம். ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் மே 3ஆம் தேதி அன்றுக்குள் உச்ச அளவை எட்டுமா அல்லது அதன்பிறகு உச்ச அளவை எட்டுமா என்பதை உறுதியாக கூற முடியாது. ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் குறைந்துக்கொண்டே வருகிறது. அத்துடன் குணமடைந்து வீடு திரும்புபவர்களுடைய எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்