'இந்தியாவில்' கொரோனா பாதிப்பு... 'மே' மாதம் 'உச்சத்தை' தொட வாய்ப்பு 'ஆனால்'... வெளியாகியுள்ள 'கணிப்பு'...
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா பாதிப்பு மே மாதம் உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாகவும், அதன்பிறகு பாதிப்பு குறையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மே 3ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது உள்ள நிலையே நீடித்தால் இந்தியாவில் மே மாதம் முதல் வாரத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாகவும், அதன்பிறகு பாதிப்பு குறையும் எனவும் உள்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் ஊரடங்கை இப்போது உள்ளதை விட கடுமையாக பின்பற்றினால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் இருந்து மருத்துவ பரிசோதனை கருவிகள் இந்தியா வந்துள்ளதையடுத்து நாடு முழுவதும் பரிசோதனை அதிகரிக்கப்பட்டு, சுவாச பிரச்சனை தொடர்பான அறிகுறிகள் உள்ளவர்கள் அனைவருக்கும் சோதனை செய்யப்பட உள்ளது. நோய் அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பாதிப்பு உறுதி செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் இதுவரை கொரோனாவுக்கென தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் பாதிப்பை கட்டுப்படுத்த சமூக விலகல் ஒன்றே தீர்வு எனவும் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஏப்ரல் 20ம் தேதிக்கு பின்... எவற்றை எல்லாம் செய்ய அனுமதி?... மத்திய அரசு புதிய அறிவிப்பு!.. முழு விவரம் உள்ளே
- “எங்கயும் இப்படி இல்லங்க.. தமிழ்நாட்டுலதான்!”.. முதல்வரின் ஸ்பாட் விசிட்! சேலத்தில் கொரோனா அப்டேட்ஸ் என்ன?
- ‘சென்னையில் மொத்தம் 217 பேருக்கு கொரோனா’.. ‘இந்த’ ஏரியாலதான் பாதிப்பு கொஞ்சம் ‘அதிகம்’.. வெளியான லிஸ்ட்..!
- “3 வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பு!.. இப்ப தளர்த்துனா அப்றம்..”.. நிபந்தனைகளுடன் ‘இங்கிலாந்து’ எடுத்த முக்கிய முடிவு!
- 'மச்சி சென்னை சென்னை தாண்டா'... 'ஆளே இல்லாமல் எப்படி இருக்கும்'? ... 'Drone'ல் மின்னிய நம்ம 'சென்னை'... காவல்துறை வெளியிட்ட வீடியோ!
- ஊரடங்கில் ‘காதலியை’ பார்க்கபோய் போலீஸில் சிக்கிய வாலிபர்.. கோர்ட்டில் சொன்ன ஒரு ‘காரணம்’.. தண்டனை வழங்காமல் அனுப்பிய நீதிபதி..!
- கொரோனா பாதிப்பால்... 'மும்பை'யின் ஐசியு-க்களில்... நெஞ்சை நொறுக்கும் சோகம்!
- ‘கொரோனா பத்தி போலி செய்திகளையும் வதந்திகளையும் பாக்குறவங்களுக்கு!’.. பேஸ்புக் அதிரடி நடவடிக்கை!
- 'சொந்த வீடு வாங்கிட்டானே, பொண்ணு பாக்க ஆரம்பிச்சோம்'... 'Work From Home செஞ்ச ஐடி ஊழியர்'... ஒரே நிமிடத்தில் நடந்து முடிந்த பயங்கரம்!
- ‘30 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை’.. சென்னைக்கு வந்த சீனாவின் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’!