இந்தியா-சீனா எல்லையில் மீண்டும் மோதல்... என்ன தான் நடக்குது?.. எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் 'இது' தான்!.. சீனா அடித்த பல்டி!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாங்கள் ஒருபோதும் மற்ற நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை என்றும், ஒருபோதும் எந்தப் போரையும் தூண்டவில்லை எனவும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் தெரிவித்து உள்ளார்.
லடாக்கின் கிழக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறிய சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் கடந்த மாதம் 15-ந் தேதி ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 பேர் உயிர் இழந்தனர். ஆனால், சீன தரப்பில் உயிரிழப்பு விவரங்களை வெளியிடவில்லை.
கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் ரோந்து புள்ளி 15 இல் ஆரம்ப படைகள் விலகி கொண்டாலும் பாங்கோங் ஏரி மற்றும் ரோந்து புள்ளி 17 ஏ என அழைக்கப்படும் கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியிலிருந்து செல்ல சீனா தயக்கம் காட்டுகிறது.
லடாக் எல்லையில் நேற்று சீன ராணுவம் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. பாங்கோங் ஏரியின் தெற்கு கரை பகுதியில் சீன படையினர் அத்துமீறலில் ஈடுபட்டனர். சீன ராணுவத்தினரை இந்திய ராணுவம் விரட்டியடித்துள்ளது.
ஆனால், இந்த குற்றச்சாட்டை சீன ராணுவம் மறுத்துள்ளது. நாங்கள் ஒருபோதும் மற்ற நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை என்று சீனா கூறியுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங், "சீனா ஒருபோதும் எந்தவொரு போரையும் மோதலையும் தூண்டவில்லை, சீன ராணுவம் ஆகஸ்ட் 29 மற்றும் 30 தேதிகளில் இரவு கிழக்கு லடாக்கிலுள்ள பாங்கோங் த்சோவின் தென் கரையில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடக்கவில்லை.
சில தகவல்தொடர்பு சிக்கல்கள் இருந்திருக்கலாம். இரு நாடுகளும் தொடர்ந்து உறவுகளில் நல்லெண்ணத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். எல்லையில் அமைதியை உறுதி செய்ய வேண்டும்.
இரு தரப்பினரும் உண்மைகளை புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் இருதரப்பு உறவுகளைப் பேணுவதில் நல்லெண்ணம் இருக்க வேண்டும். எல்லையில் அமைதியைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்."
இந்தியத் தூதரக செய்தித் தொடர்பாளர் ஜி ரோங், இந்திய வீரர்கள் எல்லையை கடந்து, சீன பிராந்தியத்தில் அமைதியை சேதப்படுத்துவதாக குற்றம் சாட்டியதை அடுத்து இந்த கருத்துகள் வந்துள்ளன.
இந்த நிலையில், ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் கூறியதாவது, "கிழக்கு லடாக் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியா - சீனா இடையே பிரச்சினை உள்ளது. இரு நாடுகளும் இடையேயான எல்லை இன்னும் வரையறுக்கப்படவில்லை என்பதன் காரணமாகவே பிரச்சினை ஏற்படுகிறது" என்றார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '6 வயசுல இருந்தே தலைவலி...' 'கை கால் எல்லாம் மரத்து போயிருக்கு...' 'ஆனா பிரச்சனை தலைக்குள்ள உயிரோட இருந்த...' - விஷயம் தெரிஞ்சு மிரண்டு போன டாக்டர்ஸ்...!
- 'எல்லோருக்கும் ஃபிரீ டெஸ்ட்'... 'அதெல்லாம் இல்ல'... 'சீனாவோட பயங்கரமான பிளான் இதுதான்'... 'அச்சத்தில் சந்தேகத்தை கிளப்பியுள்ள மக்கள்!'...
- 'உள்ள வெச்சேதான் விக்கறாங்க'... 'சீன ஸ்மார்ட் போன்களால்'... 'இப்படி எல்லாம் கூட ஆபத்து இருக்கா?... 'பீதியை கிளப்பியுள்ள பகீர் தகவல்!''...
- 'உலகிலேயே முதல்முதலாக இப்படி ஆகியிருக்கு'... ' 4 மாதங்களுக்கு பின் அதிர்ச்சி கொடுத்த கொரோனா'... 'ஆய்வாளர்கள் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!'...
- 'அவங்க இங்க வர்றதே 'இது'க்காகத் தான்!'.. சீனாவின் ஜாம்பவானுக்கு செக்!.. 'அதிர்ச்சி' தகவலை வெளியிட்ட தைவான்!.. புரட்டிப்போட்ட முடிவு!
- 'தடுப்பூசி விஷயத்தில்'... 'துணிச்சலாக புது ரூட்டை கையிலெடுத்த சீனா'... 'பாதிப்பு குறைய இதுதான் காரணமா?'... 'சந்தேகத்தை கிளப்பும் நாடுகள்'...
- 'இனி மாஸ்க் எல்லாம் தேவையில்ல'... 'என்னதான் நடக்குது அங்க?'... 'அதிரடி அறிவிப்புகளால் ஷாக் கொடுக்கும் நாடு!'...
- 'மாஸ்க், இடைவெளி இன்றி'... 'ஆயிரக்கணக்கில் குவிந்த பார்ட்டி பிரியர்கள்'... 'வைரலாகப் பரவும் வாட்டர் பார்க் போட்டோஸ்!'...
- 'சீனாவில் 8 ஆண்டுகளுக்கு முன்பு'... 'முதல்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா?'... 'அதிர்ச்சி கொடுக்கும் ஆய்வாளர்கள்!'...
- 'பனியில் புதைந்த நிலையில் கிடைத்த உடல்'... '8 மாதங்களாக ரண வேதனையை அனுபவித்த குடும்பம்'... சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!