இந்தியாவுல இவ்வளவு காரை யாருமே திருடுனது இல்லயாம்.. ரெக்கார்ட்டே வச்சிருப்பாரு போலயே.. யாருய்யா இந்த அணில் சௌஹான்..?
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் மிகப்பெரிய கார் திருடர் எனக் கூறப்படும் அணில் சௌஹான் என்பவரை டெல்லி காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இது இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமை சேர்ந்தவர் அணில் சௌஹான். 52 வயதான இவருக்கு 3 மனைவிகள் மற்றும் 7 குழந்தைகள் இருக்கின்றனர். 12 ஆம் வகுப்பு வரை படித்திருக்கும் அணில், அசாம் மாநிலத்தின் அரசு கான்டராக்ட்களை எடுத்து பணிபுரிந்து வந்திருக்கிறார். இதனையடுத்து அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதில் சட்டத்திற்கு புறம்பாக அவர் சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து அவரது சில சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருட்டு
இதன்பின்னர் வடகிழக்கு மாநிலத்தில் காண்டாமிருக கொம்புகளை கடத்தியதாக அவர்மீது வழக்கு பதியப்பட்டது. அதன்பிறகு பல்வேறு மாநிலங்களில் கார் திருட்டை செய்துவந்த அணிலை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இதற்கு முன்னர் பலமுறை அவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். 1998 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட கார்களை அணில் திருடியதாக காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர். இவர்மீது நிஜாமுதீன் காவல் நிலையத்தில் போடப்பட்ட வழக்கில் இவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வழக்குகள்
இதுவரையில் அணில் சௌஹான் மீது 180 வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. அவற்றுள் பெரும்பாலானவை கார் திருட்டு வழக்குகள். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் அணில் டெல்லியில் வைத்து காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் சில துப்பாக்கிகள் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி பேசிய துணை போலீஸ் கமிஷனர் ஸ்வேதா சவுகான்," கடந்த சில வாரங்களாக டெல்லியின் மத்திய மாவட்டத்தில் ஆயுத புழக்கம் அதிகரித்திருப்பதாக தகவல்கள் வந்தது. இதனையடுத்து சிறப்பு படையினர் இப்பகுதியில் ஆய்வுகளை நடத்தி வந்தனர். அப்போதுதான் இந்தியாவின் மிகப்பெரிய கார் திருடரான அணில் சவுகான் இங்கே இருக்கும் தகவல் காவல் துறையினருக்கு கிடைத்திருக்கிறது. இதன் அடிப்படையில் கடந்த ஆகஸ்டு 23 ஆம் தேதி அவரை கைது செய்தோம்" என்றார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 5 நாள்ல 4 பேரு.. மொத்த படையையும் களத்துல இறக்குன போலீஸ்.. விசாரணைல இளைஞர் சொன்ன விஷயம்.. எல்லாரும் ஒருநிமிஷம் ஆடிப்போய்ட்டாங்க..!
- ரூ 6 கோடி மதிப்புள்ள பொருட்களை களவாடிய கும்பல்.. கடைசில 100 ரூபாய்க்கு ஆசைப்பட்டு போலீசில் சிக்கிய வினோதம்..!
- லோன் அப்ளிகேஷன்கள் மூலம் வரும் ஆபத்து.. சென்னை காவல் ஆணையர் கொடுத்த முக்கிய அட்வைஸ்..!
- அடுத்தடுத்து நடந்த 3 பயங்கரம்... குறிப்பா அவங்க மட்டும் தான் டார்கெட்.. மொத்த மாநிலத்தையும் நடுங்க வைக்கும் 'Stone Man'.. முழுவிபரம்..!
- "12 வருஷம் ஆகியும் புடிக்க முடியல".. திக்கித் திணறும் போலீஸ்.. "துப்பு குடுத்தா 50,000 டாலராம்".. தீவிரமாக இறங்கிய அதிகாரிகள்
- கிளம்புன இடத்துக்கே திரும்புன விமானம்.. தரையிறங்குன அப்பறம் தான் விபரமே தெரியவந்திருக்கு..!
- காருக்குள் ஏறிய பாம்பு.. "பல நாள் தேடியும் கிடைக்காம கடைசி'ல"..உச்சகட்ட பதற்றத்தில் வாலிபர்!!.. "இவ்ளோ நாள் இதுகூடயா Travel பண்ணோம்"
- "எதுக்கு பைக்கை திருடுன?".. போலீசாரின் கேள்விக்கு இளைஞர் சொன்ன பதில்.. ஒரு நிமிஷம் எல்லாருமே ஷாக் ஆகிட்டாங்க..!
- "உங்களைத்தான் நம்பி இருக்கேன்".. தனியாளாக காவல்நிலையத்துக்கு போன சிறுவன்.. புகாரை கேட்டு அதிர்ந்துபோன போலீசார்..!
- உயிரிழந்து கிடந்த 'பெண்'.. 34 வருசமா கண்டுபிடிக்க முடியாம திணறிய போலீஸ்.. "மர்ம நபர் எழுதிய Letter மூலமா தெரியவந்த உண்மை"..