'இங்கிலாந்தில் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா'... மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதில் அதிர்ச்சியான செய்தி என்னவென்றால் இந்த புதிய வகை வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாகப் பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், அந்நாட்டில் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச்சூழ்நிலையில் இங்கிலாந்தில் புதியவகை கொரோனா பரவுவது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டுடனான விமான போக்குவரத்தைப் பல நாடுகள் தடை செய்துள்ளன. ஆஸ்திரியா, இத்தாலி,பெல்ஜியம், நெதர்லாந்து, சவுதி அரேபியா, துருக்கி எனப் பல நாடுகள் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தைத் தடை செய்துள்ளன.
இந்நிலையில் இந்தியாவும் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்து சேவைக்கு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் அனைத்து வகை விமானங்களுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. புதிய வகை கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டே இந்த விமான போக்குவரத்து தடை அமல்படுத்தப்படுகிறது.
இந்த தடை உத்தரவானது நாளை (டிசம்பர் 22) இரவு 11.59 மணி முதல் டிசம்பர் 31 இரவு 11.59 மணி வரை அமலில் இருக்கும் என இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மறுபடியும் மொதல்ல இருந்தா?... தீவிர லாக்டவுன்-ஐ அமல்படுத்திய நாடு... அவசர அவசரமாக ஆலோசனை நடத்தும் இந்தியா!!
- ஆவலோடு காத்திருக்கும் மக்கள்.. கொரோனா ‘தடுப்பூசி’ எப்போது பயன்பாட்டுக்கு வரும்..? மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் முக்கிய தகவல்..!
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. தற்போது எத்தனை பேர் சிகிக்சை பெறுகிறார்கள்?.. சென்னையின் நிலை என்ன?.. முழு விவரம் உள்ளே
- 'தண்ணீரில் மிதந்து கொண்டே திரைப்படம்'... கொரோனாவால் இழந்த சினிமா அனுபவத்தை அதைவிட ரெண்டு மடங்காக பெறும் ‘கொடுத்து வெச்ச’ ரசிகர்கள்!
- 'கொரோனா தடுப்பூசி போட்டதும்'... 'நேரலையில் மயங்கி விழுந்த செவிலியர்!'.. உண்மையில் நடந்தது என்ன? நிபுணர்களின் மருத்துவ விளக்கம்!
- ‘மாறுபாடு அடைந்து வேகமாக பரவும்’... ‘புதிய வகை கொரோனா வைரஸ்’... ‘மீண்டும் லாக் டவுனை நோக்கி சென்ற நகரம்’... 'கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பு’...!!!
- 'இந்தியாவில் 6-7 மாதங்களுக்குள்’... ‘இத்தனை கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்’... ‘மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்’...!!!
- 'தமிழகத்தின் இன்றைய (19-12-2020) கொரோனா அப்டேட்'... 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்'... 'முழு விவரங்கள் உள்ளே!'...
- கொரோனா தடுப்பூசி போட்ட கொஞ்ச நேரத்தில் சரிந்த ‘நர்ஸ்’.. மேடம் உங்களுக்கு என்ன ஆச்சு..? டிவி நேரலையில் நடந்த அதிர்ச்சி..!
- 'அடுத்த தடுப்பூசியும் வந்தாச்சு!'... “ரிஸ்க்கை விட, பயன்கள் அதிகம்” - ஆலோசனைக்குழு அளித்த அறிக்கை .. எகிறும் எதிர்பார்ப்பு!