‘வேகவேகமாக வெளியேறும் மக்கள்’.. ஆப்கானில் இருந்து சீக்கிரம் இந்தியா வர ‘விசா’ முறையில் புதிய மாற்றம்.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வருவதற்கான விசா கட்டுப்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தளர்த்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையே பல ஆண்டுகளாக நடந்து வந்த போர் முடிவுக்கு வந்தது. இதில் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் வந்துவிட்ட செய்தி வந்ததுமே, உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்யும் பணிகளை தொடங்கின.
அந்த வகையில், இந்தியாவும் ஆப்கானிஸ்தானில் உள்ள நம் நாட்டு மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. நேற்று முன்தினம் 129 பேருடன் ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரு விமானம் இந்தியா வந்தது. இதனிடையே நேற்று காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட களேபரத்தால் திடீரென விமான நிலையம் மூடப்பட்டது. இதனால் எந்த விமானமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று (17.08.2021) அதிகாலை காபூல் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. இதனை அடுத்து 120 இந்திய அதிகாரிகளுடன் காபூலில் இருந்து இந்தியாவுக்கு 2-வது விமானம் புறப்பட்டுள்ளது.
இதனிடையே ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் இந்தியா வருவதற்கான விசா முறையில் சில தளர்வுகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆன்லைனில் சீக்கிரமாக விசா பெறும் வகையில் புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் பதற்றம் நிலவி வரும் நிலையில், அந்நாட்டு மக்கள் விரைவாக இந்தியா வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- உங்க 'பொண்ணுங்கள' எங்களுக்கு 'மனைவி' ஆக்குறீங்களா இல்லையா...? 'ரத்தக்கண்ணீர் வடிக்கும் குடும்பங்கள்...' - தொடரும் தாலிபான்களின் அட்டூழியங்கள்...!
- H1B விசா விவகாரம்!.. தனக்குத் தானே குழி வெட்டி படுத்துக் கொண்ட அமெரிக்கா!.. இந்தியர்களின் சாய்ஸ் இனிமே 'இது' தான்!
- "கைலாசாவுக்கு வர விருப்பமா?.. நீங்க செய்ய வேண்டியது 'இது' தான்!".. நித்யானந்தா அதிரடி offer!
- இந்திய ஐடி ஊழியர்களுக்கு ‘குட் நியூஸ்’.. H1B விசா விவகாரம்.. அமெரிக்க நீதிமன்றம் ‘அதிரடி’ உத்தரவு..!
- கொரோனா வைரஸ் ‘2-வது அலை’.. 11 நாடுகளுக்கு ‘விசா’ வழங்குவது நிறுத்தம். அதிரடியாக அறிவித்த நாடு..!
- அதிபராகும் ஜோ பைடன்!.. இந்தியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!.. ஒரே கல்லில் 2 மாங்காய்!.. வெளியான பரபரப்பு தகவல்!
- “இவர்களைத் தவிர” மற்ற வெளிநாட்டவர் இந்தியா வரத் தொடங்கலாம் - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!
- 'இனிமேல் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை'... வெளியான முழு பட்டியல் இதோ!
- ‘H1B விசா வழக்கு’.. இந்தியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்பு..!
- '55 வயதான வெளிநாட்டவர்களுக்கு'.. 'விசா' விஷயத்தில் 'அதிரடி' சலுகை அறிவித்துள்ள நாடு!