இந்தியால நேத்து 'ஒருநாள்' மட்டும் 'இத்தனை' பேருக்கு ஓமிக்ரான் வைரஸா...? - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சுகாதாரத்துறை அமைச்சகம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்தியாவில் நேற்று ஒருநாள் மட்டும் எத்தனை பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உருமாறி தற்போது தென் ஆப்பரிக்காவில் ஒமைக்ரான் வைரசாக உலகெங்கும் பரவி வருகிறது. இந்த ஒமைக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவலாக பரவி வருகிறது.
ஒமைக்ரான் வைரஸ், கொரோனாவின் திரிபானா டெல்டா வைரஸ் போல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று கூறப்பட்ட நிலையிலும், அதிவேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் முதன் முதலில் கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் இருவருக்கு இந்த ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது.
இதன் காரணமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பாதிக்கப்பட்ட நபர்களின் தொடர்பில் இருந்த முதல் நிலைத் தொடர்பாளர்கள், 2-ம் நிலைத் தொடர்பாளர்கள் கண்டறியப்பட்டு ஏறக்குறைய 500 பேர் தனிமைப்படுத்தியது.
இந்நிலையில் ஜிம்பாப்வேயில் இருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு குஜராத்தின் ஜாம்நகருக்கு வந்தவருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது. அதோடு, தென்னாப்பிரிக்காவில் இருந்து மகாராஷ்டிரா திரும்பிய 33 வயது நிரம்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் நேற்று டெல்லி திரும்பிய ஒருவருக்கு இன்று ஒமைக்ரான் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்தது.
அதுமட்டுமில்லாமல் நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
அதனை தொடர்ந்து நைஜீரியாவில் இருந்து புனே வந்த 44 வயது பெண் மற்றும் அவரது உறவினர்களுக்கும், கடந்த மாதம் ஃபின்லாந்திற்குச் சென்ற 47 வயதான ஒருவருக்கும், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு ஒமைக்ரான் வரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனால் நேற்று ஒரு நாள் மட்டும் இந்தியாவில் ஒமைக்ரான் வகை தொற்று 17 பேருக்கு பரவி மொத்தமாக 21 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஒட்டுமொத்த உலக நாடுகளும் ஓமிக்ரானைக் கண்டு அச்சப்படும் நிலையில்...' - WHO விஞ்ஞானி வெளியிட்ட முக்கிய தகவல்...!
- உலகமே 'ஓமிக்ரான' நினைச்சு 'ஃபீல்' பண்ணிட்டு இருந்தப்போ... 'மனசு குளிருற மாதிரி வந்துள்ள கிரேட் நியூஸ்...' - தென் ஆப்பிரிக்க மருத்துவர் சொன்ன தகவல்...!
- “இது ஆரம்ப நிலை தான்”!.. ஓமிக்ரான் பற்றி முதன்முதலாக எச்சரித்த மருத்துவர் சொன்ன ‘முக்கிய’ தகவல்..!
- இந்தியாவிற்குள் வந்த ஓமிக்ரான்.. அறிகுறி உள்பட தெரிய வேண்டிய 10 உண்மைகள்
- அது ஒண்ணும் 'பாப்கார்ன்' இல்லங்க...! 'ஓமிக்ரான் வைரஸ்...' - பிசிசிஐ-ஐ எச்சரித்த அமைச்சர்...!
- அச்சுறுத்தும் ‘ஓமிக்ரான்’ வைரஸ்.. சவுரவ் கங்குலி சொன்ன ‘முக்கிய’ தகவல்..!
- 'ஓமிக்ரான்' வைரஸ ஃபேஸ் பண்றதுக்கு 'அது' மட்டும் தான் 'ஒரே வழி', இல்லன்னா...' - ஃபேமஸ் வைராலஜிஸ்ட் 'முக்கிய' தகவல்...!
- எங்க தடுப்பூசி 'ஓமிக்ரான்' வைரஸ் கூட 'நின்னு' மோதும்...! - 'தடுப்பூசி' நிறுவன அதிகாரி தகவல்...!
- இதை பண்றதால மட்டும் ‘ஓமிக்ரான்’ வைரஸ் பரவலை தடுத்திட முடியாது.. உலக சுகாதார அமைப்பு கொடுத்த எச்சரிக்கை..!
- 'ஒமிக்ரான்' வைரஸ 'எங்க தடுப்பூசி' சும்மா கதற விட்ரும்...! - கெத்து காட்டும் நாடு...!