'வேலை இழப்பு ஒருபக்கம் இருந்தாலும்...' 'இந்த விஷயம்' இன்னும் ரொம்ப ஆபத்து...! - அதிர வைக்கும் சர்வே முடிவுகள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸின் இரண்டாம் அலையின் தாக்கத்தால் இந்தியாவில் மீண்டும் வேலை இழப்போரின் சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் 2021ஆம் ஆண்டு ஆகியும் முடிவடைந்த பாடில்லை. அதோடு 2020ஆன் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பால் பலர் தங்களின் வேலையை இழந்தனர்.
இந்திய உள்ளிட்ட பல உலக நாடுகளும் பொருளாதார அளவில் பெரும் சறுக்கலை சந்தித்தது எனலாம். இந்த வருடமும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கத்தால் சுமார் 70 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்று இந்திய பொருளாதார கணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கூறிய இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் இயக்குனர் மகேஷ் வியாஸ் கூறும்போது, 'இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி ஊரடங்கு காரணமாக மார்ச் மாதத்தை விட, ஏப்ரல் மாதத்தில் 75 லட்சம் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளது.
வேலை இழப்பு ஒருபக்கம் அதிகரித்து வரும் சூழலில் தொழிலாளர் பங்களிப்பு வீதமும் குறைந்து வருகிறது. இது மிகவும் ஆபத்தானது” என்று தெரிவித்துள்ளார்.
“வேலை வாய்ப்பு குறைந்துள்ளது, இது கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலையினால் இருக்கலாம்” என்று சிஎம்ஐஇ தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில் நாட்டின் வேலையின்மை சதவீதம் 6.50 ஆக இருந்தது. இந்த நிலையில் ஒரு மாதத்தில் 7.97-ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா அதிகரிப்பது போல கொரோனா தொற்றும் அதிகரித்து வருகிறது. இன்னொரு பக்கம் பார்த்தால் வாக்சின் போடப்படும் நடைமுறைகளும் மந்தமடைவது இந்திய பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கும்' என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நாட்டின் வேலை இழப்பு சதவீதம் 7.97 -ஐ தொட்டுள்ளது. இதுவே நகர்ப்புறங்களில் 9.78 சதவீதமாகவும், கிராமப்புற வேலையின்மை 7.13 சதவீதமாகவும் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இனி காலை முதல் மதியம் வரை மட்டுமே அனுமதி’!.. தமிழகத்தில் ‘புதிய’ கொரோனா கட்டுப்பாடு அறிவிப்பு.. முழு விவரம்..!
- 'இருக்கா?.. இல்லையா?.. சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க'!.. சிஎஸ்கேவின் கொரோனா ரிப்போர்ட் குறித்து... அடுத்தடுத்து திருப்பங்கள்!.. ரசிகர்கள் குழப்பம்!!
- 'இந்தியாவில் இருந்து தப்பிக்க... புது ரூட்டை கண்டுபிடித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்'!.. அடுத்து காத்திருந்த ட்விஸ்ட்!.. ஐபிஎல்லுக்கு இப்படி ஒரு நிலைமையா?
- 'வரலாற்றிலேயே முதல் முறை'... 'இந்தியாவிலிருந்து சொந்த நாட்டுக்கு வந்தா 5 ஆண்டு சிறை'... அதிரடியாக அறிவித்துள்ள நாடு!
- 'அதிகரிக்கும் கொரோனா'... 'இந்த மாவட்டங்கள் தான் ரொம்ப சவாலா இருக்கு'... ராதாகிருஷ்ணன் தகவல்!
- 'இப்படி ஒரு கணவன் மனைவியா'...'அவர் கேட்டாரு நான் நகையை கழற்றி கொடுத்தேன்'... தனது கஷ்டத்திலும் இப்படி ஒரு முடிவை எடுத்த ஆட்டோ டிரைவர்!
- 'கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை'... தமிழக அரசு கொண்டு வந்துள்ள அதிரடி திட்டம்!
- "எனக்காக நீங்க இருந்தீங்க... இப்போ உங்களுக்காக"... சச்சின் எடுத்த அதிரடி முடிவு!.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!!
- வந்துட்டே இருக்கேன் நண்பா...! 'இதுக்கு மேல வெயிட் பண்ண கூடாது...' 'மொத்தம் 1,400 கி.மீ டிஸ்டன்ஸ்...' - நெகிழ வைத்த நண்பன்...!
- 'இதுனால தான் கடவுளை உங்க ரூபத்தில் பாக்குறோம்'... 'அதிகரித்த கர்ப்பிணிகளின் எண்ணிக்கை'... கொஞ்சம் கூட யோசிக்காமல் அரசு மருத்துவர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!