விஐடி போபால் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் & பயிற்றுநர்கள் வசிப்பிடம் திறப்பு விழா

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

விஐடி போபால் பல்கலைக்கழக வளாகத்தில் விஐடி கல்விக் குழுமத்தின் நிறுவனர் /வேந்தர் டாக்டர் ஜி. விசுவநாதன், பேராசிரியர்கள் வசிப்பிடத்தைத் திறந்து வைத்தார்.

Advertising
>
Advertising

எளிமையான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை தலைவர் திரு. சங்கர் விஸ்வநாதன் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர் திருமதி. ரமணி பாலசுந்தரம், சிறப்பு பூஜைகளையும் புது இல்லம் புகும் சடங்குகளையும் நடத்தினர். முதல் குழு சார்ந்த பயிற்றுநர்களுக்கு அவரவர் இருப்பிடத்தின் திறவுகோல்களை, வேந்தர்  வழங்கினார்.

பின்னர் வேந்தர் பேசும்போது தமது சிறப்புரையில், "எழில் சூழ்ந்த பாதுகாப்பான, சிறப்பான அமைப்பு மிக்க வளாகத்தை உருவாக்க வேண்டும் என்பதில் நாங்கள் என்றும் உறுதியாக செயல்படுகிறோம். மாநகரத்தை விட்டு விலகி இருக்கும் இந்த விஐடி போபால் வளாகம், அதிநவீன /அமைதியான வசிப்பிட சூழலை பயிற்றுநர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் முழுமையாக வழங்குகிறது.

இதன் வாயிலாக, வளாகத்திற்குள் மிகச்சிறந்த கற்றல் மட்டும் அல்லாமல் வாழ்விட சூழலுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அலுவல் நேரம் கடந்த நேரங்களில் பேராசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்களுடன் நம் மாணவர்கள் கலந்துரையாடுவதால் அவர்களது கல்வி முழுமை பெறுகிறது எனலாம்.

ஆம்.. பல்கலைக்கழகம் என்பது மாற்றங்களை உருவாக்கும் கேந்திரம். இங்கு தான் வாழ்க்கை மாறுகிறது. அறிவாற்றல் என்பது உருவாகி மேலும் கூர்மைப்படுத்தப்படுகிறது.

விஐடி போபால் பல்கலைக்கழகத்ம் வருங்காலத்தை உறுதி செய்கிற பல்வேறு படிப்புகளால் நற்பெயர் பெற்ற கல்விக்கூடம் ஆகும். இங்கு தொழில்நுட்பம் சார்ந்த, CALTech - ன் புத்தாக்க முறையிலான கற்பித்தல், கற்றல் வழிமுறைகள் கையாளப்படுகின்றன!" என்று குறிப்பிட்டார்.

VIT BHOPAL

மற்ற செய்திகள்