'ஆம்பன்' புயல் வர போகும் தேதியை அறிவித்தது...! 'வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்...' சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாவரும் 16 ஆம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
இந்திய தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளான அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உண்டாகி உள்ளது. இதன் காரணமாக வரும் வரும் 15 ஆம் தேதியில் இந்த காற்றழுத்த மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாகவும், அப்படி காற்றழுத்த மண்டலமாக உருவாகி அவை மத்திய வங்கக் கடல் பகுதியில் மையம் கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ்வாறு உருவாக்கப்படும் காற்றழுத்த மண்டலமானது 16 ஆம் தேதி புயலாக உருமாறவும் வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த புயலுக்கு ஆம்பன் என்று பெயர் வைத்துள்ளனர்
மேலும் தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய உள்ள மத்திய வங்கக் கடல் பகுதிகளில் வரும் 15,16 மற்றும் 17 ஆம் தேதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என அறிவித்த வானிலை மைய அதிகாரி தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய உள்ள மத்திய வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'உருவாகும் புயல் சின்னம்'... 'அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு'... 'வானிலை மையம் தகவல்'!
- ‘அரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது மஹா’.. ‘14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..
- 'சுழற்றி அடிக்க போறேன்'...'ரெடியா இருந்துக்கோங்க'...தயார் நிலையில் 'கடற்படை'!
- 'தமிழகத்தை நோக்கி வரும் ஃபானி புயல்.. ' 2 நாட்கள் ரெட் அலர்ட்'?
- வங்கக் கடலில் 48 மணிநேரத்தில் புயல்.. சென்னையில் மழைக்கு வாய்ப்பு?