'சட்டசபை வரலாற்றில் முதல் முறை'... 'மாமனாரும், மருமகனும் ஒன்றாக சட்டசபைக்குள் நுழையும் ஆச்சரியம்'... சுவாரசிய பின்னணி!
முகப்பு > செய்திகள் > இந்தியாமுதல் முறையாக மாமனாரும், மருமகனும் எல்எல்ஏவாகி சட்டப்பேரவைக்குச் செல்ல உள்ளனர்.
கேரள அரசியல் வரலாற்றில், தந்தை, மகன், சட்டமன்ற உறுப்பினராக, எம்.பி.யாக இருப்பதை மக்கள் பார்த்திருக்கிறார்கள். தற்போது முதல்வர் பினராயி விஜயனும், அவரின் மருமகன் முகமது ரியாஸும்தான் வெற்றி பெற்று ஒன்றாகச் சட்டப்பேரவைக்குள் செல்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முதல்வருமான பினராயி விஜயனின் மகள் வீணாவைத் திருமணம் செய்தவர் முகமது ரியாஸ்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தேசியத் தலைவராக முகமது ரியாஸ் உள்ளார். கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் கோழிக்கோடு மாவட்டம், பேப்பூர் தொகுதியில் போட்டியிட்ட முகமது ரியாஸ் வெற்றி பெற்றார். தர்மடம் தொகுதியில் போட்டியிட்ட பினராயி விஜயன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதற்கு முன்னர் கேரள சட்டப்பேரவையில் கடந்த காலங்களில் தந்தை -மகன், தந்தை - மகள் எனச் சட்டப்பேரவைக்குள் சட்டமன்ற உறுப்பினர்களாக வந்துள்ளனர். ஆனால், முதல் முறையாக மாமனார், மருமகன் ஜோடியாகச் சட்டப்பேரவைக்குள் வருவது இதுதான் முதல் முறையாகும். இந்தத் தேர்தலில் தந்தை மகன், அரசியல் தலைவர்களின் நெருங்கிய உறவுகள் எனப் போட்டியிட்டாலும் அவர்களில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். மாமனார், மருமகன் ஜோடியாக யாரும் வெற்றி பெறவில்லை.
கேரள காங்கிரஸ் தலைவர் பி.ஜே.ஜோஸப் தொடுபுழாவில் போட்டியிட்டார். அவரின் மருமகன் ஜோசப், கொத்தமங்களம் தொகுதியில் போட்டியிட்டார். இருவருமே தோற்றுப்போனார்கள். காங்கிரஸ் தலைவர்கள் கே.முரளிதரன் நீமம் தொகுதியிலும், பத்மஜா வேணுகோபால் திருச்சூர் தொகுதியிலும் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மகிழ்ச்சி தான்...! ஆனா இது 'அதுக்கான' நேரம் கிடையாது...! இப்போ நாம பண்ண வேண்டியது 'ஒரே' விஷயம் தான்...! - பினராயி விஜயன் பேட்டி...!
- 'கேரள' தேர்தல் முடிவுகள் குறித்து.. ஒரே வரியில் சித்தார்த் போட்ட 'ட்வீட்'.. இணையத்தில் இப்போ செம 'வைரல்'!!
- 'கேரளாவுக்கு டூர் வந்தப்போ...' பார்த்த 'அந்த ஒரு' காட்சி...! 'மொதல்ல லண்டனுக்கு போட்ட டிக்கெட்ட கேன்சல் பண்ணுங்க...' - வெளிநாட்டு தம்பதிகள் எடுத்த அதிரடி முடிவு...!
- 'கல்யாண நேரத்தில் வந்த ரிப்போர்ட்'... 'அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார்'... 'ஆனா மணமகள் சொன்ன வார்த்தை'... நெகிழ வைத்த திருமணம்!
- 'இப்படியும் நாங்க போட்டோ ஷூட் எடுப்போம்'... 'போட்டோக்களால் நெகிழ வைத்த தம்பதி'... வைரலாகும் கேரள தம்பதியரின் போட்டோஸ்!
- 'இரவில் வாட்ச்மேன் வேலை'... 'மழை வந்தா ஒழுகுற வீடு'... 'என்னால முடியலன்னு பின்வாங்க தோணுதா'?... 'அப்போ இந்த 28 வயது ரஞ்சித்தை நினைத்து பாருங்க'... மெய்சிலிர்க்க வைக்கும் சக்ஸஸ் ஸ்டோரி!
- மனைவியுடன் ஹெலிகாப்டரில் வந்த ‘பிரபல’ தொழிலதிபர்.. தரையிறங்கும் நேரத்தில் ‘திடீரென’ ஏற்பட்ட கோளாறு.. கேரளாவில் நடந்த அதிர்ச்சி..!
- 'இணையத்தை தெறிக்க விட்ட நடன வீடியோ'... 'ஆனா, இத கவனிச்சீங்களா'... 'கிளம்பிய சர்ச்சை'... வைரலாகும் கேரள மாணவர்களின் நடனம்!
- 'நான் இனிமேல் பிரசாரம் பண்ணலங்க...' 'இவ்ளோ நாள் எனக்கு புரியல...' என்னெல்லாம் பண்றாங்க தெரியுமா...? - மனமுடைந்த திருநங்கை வேட்பாளர்...!
- 'வாய்ப்பில்லை ராஜா'... 'பெட்டி எங்க பா, 92 வயதில் கெத்து காட்டிய பாட்டி'... 'கலெக்டர்' வரை போன தேர்தல் அதிகாரிகள்!