‘வாட்டி வதைக்கும் கடும் குளிர்’... ‘71 ஆண்டுகளுக்குப் பின்னர்’... ‘நவம்பர் மாதத்தில் திரும்பிய வரலாறு’... ‘இந்திய வானிலை மையம் தகவல்’...!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த 71 ஆண்டுகளில் இல்லாத வகையில் டெல்லியில் வரலாறு காணாத கடும் குளிர் நிலவுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் கடந்த 1949-ம் ஆண்டு நவம்பரில் குறைந்தபட்ச வெப்பநிலை 10.2 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி இருந்தது. இந்நிலையில் சுமார் 71 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் அதே வெப்பநிலை பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக டெல்லியில் நவம்பரில் சராசரியாக 12.9 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகி வந்தது. இதற்கு முன்னர் 1938-ல் 9.6 டிகிரியும், 1931-ல் 9 டிகிரியும், 1930-ல் 8.9 டிகிரியும் பதிவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பநிலை குறைந்ததால், டெல்லியில் கடந்த 3,20, 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் கடும் குளிர் அலை வீசியது. டெல்லியின் ஒவ்வொரு வருடமும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் கடும் குளிர் இருக்கும் என்றாலும் இந்த அளவுக்கு குறைவான வெப்பநிலை இருந்தது இல்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
டெல்லியில் தற்போது இரவு பகலாக விவசாயிகள் வேளாண் மசோதாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில், இந்த கடும் குளிரால் போராட்டம் பாதிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. எனினும், தொடர்ந்து வேளாண் மசோதாவுக்கு எதிராக போரோடுவோம் என்று விவசாயிகள் கூறி வருவதால், அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழகத்திலும் நிவர் புயல் கரையை கடந்தப் பின்னர், குளிர் வாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
‘அடுத்தடுத்த சிக்ஸர்’ .. அடித்து பறக்கவிடும் பைடன்.. ‘நிர்வாகத்தில் செய்யப்பட்டுள்ள அதிரடி மாற்றம்!’
தொடர்புடைய செய்திகள்
- 'தென் தமிழகத்தை நெருங்கும்’... ‘புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி’... 'எங்கெல்லாம் மழை பெய்யும்?’... ‘இந்திய வானிலை மையம் தகவல்’...!
- ‘புயலால் அதிக கனமழை பெய்து’... ‘ஏரிகள் நிரம்பியும், கை கொடுக்காமல்’... ‘இயல்பை விட குறைவு’... ‘வானிலை மையம் தகவல்’...!!!
- ‘நவம்பர் 29-ல் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை’... ‘இந்தப் பகுதியை நோக்கி நகர வாய்ப்பு’... ‘வானிலை ஆய்வு மையம் தகவல்’...!!!
- வெளுத்து கட்டிய நிவர் புயல்!.. 2000 வீடுகளில் புகுந்த மழைநீர்!.. சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்!
- ‘நிவர் புயல் கரையை கடந்தாலும்’... ‘இந்த 4 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும்’... ‘வானிலை ஆய்வு மையம் தகவல்’...!!!
- அச்சுறுத்தும் நிவர்!.. வெளிமாவட்ட மக்களுக்கு 'நோ என்ட்ரி' போட்ட சென்னை காவல்துறை!.. பிரதான சாலைகள் மூடல்!.. அதிரடி அறிவிப்பு!
- 'பேர கேட்டாலே அதிருது'!.. இந்த புயலுக்கு 'நிவர்'னு ஏன் பேரு வச்சாங்க?.. அப்படினா என்ன?
- மாநிலம் விட்டு மாநிலம் கடந்து... மிரட்டும் நிவர்!.. கர்நாடகாவின் முக்கிய நகரங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!.. அதிர்ச்சி தகவல்!
- ‘மணிக்கு 7 கி.மீட்டரில் இருந்து’... ‘11 கி.மீட்டராக அதிகரித்த வேகம்’... ‘எங்கெல்லாம் புயல் காற்று வீசக்கூடும்’... ‘வானிலை மையம் தகவல்’...!!!
- 'நிவர் புயலால்'... '7 மாவட்டங்களில் 110 கிமீ வேகத்தில் பலத்த காற்று!!!'... 'எங்கெல்லாம் அதிகனமழைக்கு வாய்ப்பு???'... 'வெளியான முக்கிய அப்டேட்!'...