'15 நாள்ல மன்னிப்பு கேளுங்க'... 'இல்ல 1000 கோடி கொடுங்க'... பாபா ராம்தேவ்வை திக்குமுக்காட வைத்த ஒரே ஒரு நோட்டீஸ்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவத்தை ‘முட்டாள் மருத்துவம்’ என்றும் விமர்சனம் செய்திருந்தார்.
பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதில், ''ஆங்கில மருந்துகளைச் சாப்பிட்ட லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர், இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் ஒப்புதல் அளித்த ரெம்டெசிவிர், பவிபுளு, மற்ற மருந்துகள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கத் தவறிவிட்டது'' என்று கூறியிருந்தார்.
பாபா ராம்தேவ்வின் இந்த விமர்சனம் இந்திய அளவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்கள பணியாளர்களாக தங்கள் உயிரைப் பொருட்படுத்தாது கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை இது அவமதிக்கும் செயல் எனப் பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்கள். இதனைத் தொடர்ந்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், ராம்தேவ் தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, ராம்தேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். மேலும் தனது கருத்து, யாரையேனும் காயப்படுத்தி இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், அலோபதி (ஆங்கில) மருத்துவத்தைத் தவறாகப் பேசிய பாபா ராம்தேவ், அடுத்த 15 நாட்களில் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லாவிடில் 1000 கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என்றும் கோரி இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
மற்ற செய்திகள்