காசியில் இசைஞானி இளையராஜா.. பாடல்களால் பரவசமடைந்த பக்தர்கள்.. முழுவிபரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உலக புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் இளைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. இதில் பல மொழிகளில் பாடல்கள் பாடப்பட, பக்தர்கள் அனைவரும் அதைக்கேட்டு பரவசமடைந்திருக்கின்றனர்.

Advertising
>
Advertising

75 வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக காசி தமிழ் சங்கமம் நிகழ்வு கொண்டாடப்படுகிறது. உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. காசி மற்றும் தமிழகம் இடையே பன்னெடுங்காலமாக இருந்து வரும் அறிவு பிணைப்பை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியாக இந்த நிகழ்ச்சியை நடத்துவதாக இந்து பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் கருத்தரங்குகள், சொற்பொழிவுகள் ஆகியவை நடைபெற்றன..மேலும், இரு மாநில கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. ஒருமாத காலம் நடைபெற்ற இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து சுமார் 2500 பேர் கலந்துகொண்டனர்.

இந்திய திரை இசையமைப்பாளர்களில் முக்கியமானவர்களுள் ஒருவராக கருதப்படுபவர் இளையராஜா. அன்னக்கிளி துவங்கி பல வெற்றிப் படிக்கட்டுக்களில் அவர் ஏறியிருக்கிறார். தமிழ் மட்டும் அல்லாது பல மொழிகளில் இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்நிலையில், காசி தமிழ் சங்க விழாவின் இறுதி நாட்களில் இசைஞானி இளையராஜா காசி தமிழ் சங்கமத்தில் கலந்துகொண்டார். பின்னர் இசை கச்சேரியும் நடைபெற்றது.

புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலையத்தின் அருகே கங்கை நதிக்கரையில் இந்த விழா நடைபெற்றிருக்கிறது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். விழாவில் தேவாரம், திருவாசகம் மற்றும் பாரதியார் பாடல்கள் என பலவற்றை இளையராஜா பாடியிருக்கிறார். அதேபோல. தமிழ் மட்டும் அல்லாது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் அவர் பாட, அங்கு வந்திருந்த அனைவரும் அதனை ரசித்தனர்.

இசைக் கச்சேரி நடைபெற்ற இடத்தின் பின்பகுதியில் எலெக்ட்ரிக் போர்டு மூலமாக இளையராஜாவின் சாதனைகள் விளக்கப்பட்டன. அதேபோல, அவரது இசை பங்களிப்பு குறித்தும் பல தகவல்கள் போர்டு மூலமாக ஒளிபரப்பப்பட்டன. மொத்தம் 7 பாடகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடினர். இதனால் கங்கை நதிக்கரையை இசையால் நிரம்பி காட்சியளித்தது.

ILAIYARAJA, KASI, TAMIL SANGAMAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்